Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சிஎஸ்கேக்கு 14 புள்ளிகள் போதுமா? பிளே ஆப் சுற்றுக்கு போட்டி போடும் 4 அணிகள்.. யாருக்கு வாய்ப்பு?

சென்னை : ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தற்போது 7 போட்டிகளில் வெற்றி பெற்று 14 புள்ளிகளுடன் ரன் ரேட் 0.52 என்ற நிலையில் மூன்றாம் இடத்தில் உள்ளது. இதன் மூலம் சிஎஸ்கே அணி தங்களுடைய பிளே ஆப் வாய்ப்பை பிரகாசமாக்கி கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் பிளே ஆப் சுற்றுக்கு எந்த அணி தகுதி பெறும் என்பதை தற்போது பார்க்கலாம். இனி சிஎஸ்கே அணிக்கு, ஆர்சிபிக்கு எதிராக ஒரே ஒரு போட்டி மட்டும்தான் எஞ்சி இருக்கிறது. அதில் சிஎஸ்கே அணி தோற்றால் 14 புள்ளிகள் உடன் சிஎஸ்கே இருக்கும்.

IPL 2024 Playoffs - Chennai super kings might qualify for playoff if 3 matches results favours them

அதன் பிறகு கே கே ஆர், ராஜஸ்தான், சன்ரைசஸ் டெல்லி அல்லது லக்னோ ஆகிய ஆணிகள் சிஎஸ்கே வை விட அதிக புள்ளிகள் பெற வாய்ப்பு இருக்கிறது. இதனால் தற்போது நடைபெற்று வரும் ஆர் சி பி அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி வெற்றி பெற்று லக்னோ அணிக்கு எதிராக வரும் செவ்வாய்க்கிழமை நடைபெறும் ஆட்டத்திலும் டெல்லி வென்றால் அவர்கள் 16 புள்ளிகளை பெற்று விடுவார்கள்.

இப்படி நடக்கும் பட்சத்தில் சிஎஸ்கே அணி தங்களுடைய கடைசி ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படுவார்கள். இதே போன்று லக்னோ அணி டெல்லி அணியையும், மும்பையையும் வீழ்த்திவிட்டால் அவர்கள் 16 புள்ளிகளுக்கு சென்று விடுவார்கள். இதனால் சிஎஸ்கே அணி 14 புள்ளிகள் உடன் பிளே ஆப் சுற்றுக்கு செல்ல வேண்டும் என்று நினைத்தால் லக்னோ அல்லது டெல்லி அணி தங்களுக்கு எஞ்சி இருக்கும் இரண்டு போட்டிகளில் ஒன்றில் கண்டிப்பாக தோற்க வேண்டும்.

இதேபோன்று சன்ரைசர்ஸ் அணியும் தங்களுக்கு எஞ்சி இருக்கும் இரண்டு போட்டிகள் தோற்றால் அவர்களும் இந்த 14 புள்ளிகளுடன் நிறைவு பெறுவார்கள். அப்போது மூன்று மற்றும் நான்காவது இடத்தை பிடிக்க ஆறு அணிகள் போட்டி போடும் நிலை ஏற்படும்.இன்னும் சிம்பிளாக சொல்ல வேண்டுமென்றால் சிஎஸ்கே அணி 14 புள்ளிகள் உடன் இருந்து, இன்றைய ஆட்டத்தில் ஆர் சி பி -ஐ டெல்லி அணி வீழ்த்தியும், டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் லக்னோ அணி வெற்றி பெற்றும், லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை வெற்றி பெற்றால் சிஎஸ்கே அணி 14 புள்ளிகள் பெற்ற நிலையில் பிளே ஆப் சுற்றுக்கு சென்று விடும் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Sunday, May 12, 2024, 20:14 [IST]
Other articles published on May 12, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+