Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பார்ம்க்கு திரும்பிய ஆர்ஸ்தீப் சிங்.. அதிரடி வீரர்களை ஓட விட்ட அபார பந்துவீச்சு! இந்திய அணியில் இடம்

பஞ்சாப் : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் பஞ்சாப் அணியில் இடம் பெற்றுள்ள ஆர்ஸ்தீப் சிங் அபாரமாக பந்து வீசி நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றினார். பஞ்சாப் மாநிலம் முள்ளான்பூர் நகரில் நடைபெற்ற 23வது லீகாட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் பஞ்சாப் கிங்ஸ் அணியும் பல பரிட்சை நடத்தினர்.

இதில் முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர் முடிவில் ஒன்பது விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்தது. இந்த போட்டியில் சன்ரைசர்ஸ் அணியில் இளம் வீரர் நிதிஷ்குமார் ரெட்டி அபாரமாக பேட்டிங் செய்தார் 37 பந்துகளில் 64 ரன்கள் விளாசினார்.

IPL 2024 - Punjab Kings bowler Arshdeep singh brilliant bowling performance

இதில் 5 சிக்சர், நான்கு பவுண்டரிகள் அடங்கும். இந்த நிலையில் இன்றைய ஆட்டத்தில் 200 ரன்களுக்கு மேல் அடித்திருக்கும் ஆனால் சன்ரைசர்ஸ் 182 ரன்கள் எடுத்திருக்கிறது என்றால் அது பஞ்சாப் அணியில் இடம் பெற்றுள்ள ஆர்ஸ்தீப் சிங்கின் அபார பந்து வீச்சினால் தான். நடப்பு தொடரில் ஆர்ஸ்தீப் சிங் சுமாராக பந்து வீசி வந்தார்.

இந்த தொடரில் விளையாடிய நான்கு போட்டிகளில் நான்கு விக்கெட்டுகளை மட்டுமே ஆர்ஸ்தீப் சிங் எடுத்து இருந்தார். t20 உலக கோப்பை வரும் ஜூன் மாதம் நடைபெற உள்ள நிலையில் அதில் இந்திய அணியின் முக்கிய பந்துவீச்சாளராக ஆர்ஸ்தீப் சிங் இருப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் பார்மில் இல்லாமல் தடுமாறி வந்தது இந்திய அணி நிர்வாகத்திற்கும் கலக்கத்தை ஏற்படுத்தியிருந்தது.

இந்த நிலையில் சரியான நேரத்தில் ஆர்ஸ்தீப், தன்னுடைய பார்மை மீட்டு இருக்கிறார். தொடக்கம் முதலே அபாரமாக பந்து வீசிய ஆர்ஸ்தீப் மூன்று பந்துகள் இடைவெளியில் இரண்டு முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றினார். சன்ரைசர்ஸ் அணியின் தொடக்க வீரரான டிராவிஸ் ஹெட் அபாரமாக விளையாடி வந்த நிலையில் அவருடைய விக்கெட்டை வீழ்த்தினார்.

இதேபோன்று தென்னாப்பிரிக்கா அணி வீரர் ஏய்டன் மார்க்ரம் பேட்டிங் செய்ய வந்தார். அவரை இரண்டாவது பந்தில் டக் அவுட் ஆக்கி பெவிலியனுக்கு அனுப்பினார். இதேபோன்று அதிரடியாக விளையாடி வந்த நிதீஷ்குமார் ரெட்டியையும் ஆர்ஸ்தீப் சிங் தன்னுடைய பந்துவீச்சில் ஆட்டமிழக்க செய்தார். மேலும் அதிரடி வீரர் அப்துல் சமத் விக்கெட்டையும் ஆர்ஸ்தீப் வீழ்த்தினார்.

இதில் நிதீஷ் குமார் மற்றும் அப்துல் சமாத் ஆகியோர் அதிரடியாக விளையாடி வந்தனர். ஆனால் இவ்விருவர் விக்கெட்டையும் அபாரமாக ஆர்ஸ்தீப் சிங் கைப்பற்றினார். இதன் மூலம் நான்கு ஓவர்களில் 29 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து நான்கு விக்கெட்டுகளை ஆர்ஸ்தீப் வீழ்த்தினார். இது பஞ்சாப் அணிக்கு மட்டுமல்லாமல் ஒட்டு மொத்த இந்திய அணி ரசிகர்களுக்கும் மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது.

Story first published: Tuesday, April 9, 2024, 23:20 [IST]
Other articles published on Apr 9, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+