Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

19 வயது வீரருக்கு பதில் 32 வயது வீரரை தவறாக எடுத்ததா பஞ்சாப் அணி? என்ன நடந்தது?

மும்பை :ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பஞ்சாப் அணி மினி ஏலத்தில் மிகப்பெரிய காமெடி ஒன்று செய்ததாக சமூக வலைத்தளத்தில் தகவல் பரவியது. அதாவது ஒவ்வொரு அணியும் தாங்கள் எந்த வீரர்களை எடுக்க போகிறோம் என்பது குறித்து பலமுறை கணக்குப் போட்டு 100% உறுதியுடன் வருவார்கள்.

இந்த நிலையில் ஷசாங் சிங் என்ற 19 வயது வீரரை எடுப்பதற்கு பதிலாக அதே பெயரில் உள்ள 32 வயது வீரரை பஞ்சாப் அணி மினி ஏலத்தில் எடுத்து விட்டதாக செய்திகள் கிளம்பியது. இது மிகப்பெரிய சிரிப்பலையை ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.

Punjab om ipl auction

இதைக் கூட சரியாக பார்க்காமல் ஏலத்தில் வீரர்களை எடுப்பீர்கள் என்று பலரும் குற்றச்சாட்டி இருந்தனர். தாங்கள் தவறாக வீரரை எடுத்து விட்டதாகவும் அதனை நாங்கள் திரும்பப் பெற வேண்டும் என்று ஏலத்தில் பஞ்சாப் அணி முறையிட்டதாக செய்திகள் வந்தது. எனினும் இது குறித்து தற்போது பஞ்சாப் அணி நிர்வாகம் விளக்கம் ஒன்று அளித்துள்ளது. சசாங் சிங் என்ற வீரரை நாங்கள் ஏலத்தில் எடுக்க முடிவு செய்திருந்தோம்.

ஆனால் பெயரில் குழப்பம் ஏற்பட்டு விட்டது எனினும் சசாங் சிங் எங்கள் அணியில் இணைந்ததை நினைத்து நாங்கள் மகிழ்ச்சி கொள்கிறோம். அவர் எங்களுடைய வெற்றி பயணத்தில் பங்களிப்பார் என்று நம்புகிறோம் என்று குறிப்பிட்டிருந்தது. பஞ்சாப் அணியின் இந்த அறிவிப்பு குழப்பத்தை மேலும் அதிகரித்தது. இதனை அடுத்து மீண்டும் ஒரு பதிவை வெளியிட்ட பஞ்சாப் அணி இரண்டு வீரர்களும் ஒரே பெயரில் இருந்ததால் குழப்பம் ஏற்பட்டது.

ஆனால் நாங்கள் சரியான ஷசாங் சிங்கை தான் ஏலத்தில் தேர்வு செய்து இருக்கிறோம். ஷசாங் சிங் குறித்து நாங்கள் பலமுறை ஆலோசித்தோம். அவர் நல்ல பல இன்னிங்சை விளையாடி இருக்கிறார். நாங்கள் எந்த தவறையும் செய்யவில்லை.

அவருடைய திறமையை நாங்கள் காண ஆவலுடன் இருக்கிறோம் என்று பஞ்சாப் அணி மீண்டும் விளக்கம் ஒன்றை கொடுத்தது. மேலும் தாங்கள் தேர்ந்தெடுத்த சஷாங் சிங் 32 வயதான வீரர் தான் என்றும் அவர் ஏற்கனவே சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடி இருக்கிறார் என்றும் பஞ்சாப் அணி விளக்கம் அளித்துள்ளது.

Story first published: Thursday, December 21, 2023, 7:00 [IST]
Other articles published on Dec 21, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+