Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உன்ன நம்பி நான் கெட்டேன்.. தொடர்ந்து 2வது முறையாக சொதப்பிய மேக்ஸ்வெல்.. கடுப்பில் ஆர்சிபி

பெங்களூரு : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் தற்போது 2024 ஆம் ஆண்டு சீசனில் களமிறங்கும் ஆர்சிபி அணியை ரசிகர்கள் கே ஜி எஃப் அணி என்று கூறுவார்கள். கன்னட சினிமாவானா கே ஜி எஃப் மையமாகக் கொண்டு ரசிகர்கள் ஆர் சி பி அழைப்பதற்கு காரணம், அந்த அணியில் இருக்கும் மூன்று முக்கியமான வீரர்கள் தான்.

கே என்பது விராட் கோலியையும், ஜி என்பது கிளான் மேக்ஸ்வெல்லையும் எப் என்பது டுபிளசிசை குறிக்கும். இந்த மூன்று வீரர்கள் தான் அந்த அணியின் பேட்டிங் முதுகெலும்பாக இருக்கிறார்கள் மேக்ஸ்வெல் பல போட்டிகளில் தான் விளையாடும் அணியை தனி ஆளாக வெற்றியை பெற்றுக் கொடுத்திருக்கிறார்.

IPL 2024 - RCB Batsman Glenn Maxwell twin failures made fans disappointed

இந்த நிலையில் ஆர்சிபி அணி இம்முறை சாம்பியன் பட்டத்தை வெல்ல வேண்டும் என்றால் அதற்கு மேக்ஸ்வெல் தன்னுடைய இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்ற நெருக்கடி இருந்தது. மேக்ஸ்வெல் மீதும் ரசிகர்கள் மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தனர். ஆனால் அது அனைத்தையும் அவர் வீணாக்கி விட்டார்.

ஏற்கனவே சென்னையில் நடைபெற்ற முதல் லீக் ஆட்டத்தில் மேக்ஸ்வெல் டக் ஆகி ரசிகர்களை வெறுப்பேற்றினார். இந்த நிலையில் ஆர் சி பி அணி 73 ரன்கள் வெற்றிக்கு அடிக்க வேண்டும் என்ற நிலையில் இருந்த போது மேக்ஸ்வெல் களத்தில் வந்தார். அவர் அதிரடி காட்டி ரன்களை சேர்ப்பார் என்று ரசிகர்கள் நம்பினர். விராட் கோலியும் மேக்ஸ்வெல் அதிரடியாக விளையாடுவார். நாம் பொறுமையாக விளையாடி கடைசி வரை நின்றால் போதும் என்ற திட்டத்தில் இருந்தார்.

எனினும் யாருமே எதிர்பார்க்காத வகையில் மேக்ஸ்வெல் ஹர்பிரிக் ஓவரின் போல்ட் ஆகி வெளியேறினார். அவர் வெறும் ஐந்து பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு மூன்று ரன்கள் சேர்த்தார். இதனால் ஆர் சி பி அணி சரிவை சந்தித்தது. மேக்ஸ்வெல் விரைவாக அவுட் ஆக்கி சென்றதால் அணியை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு விராட் கோலி தலையில் விழுந்தது.

இதனால் விராட் கோலி தன்னுடைய அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த ஆரம்பித்தார். வேகமாக ரன் சேர்க்க வேண்டும் என்ற கட்டாயத்தில் ஆடிய விராட் கோலி 77 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஒரு அதிரடி சாட்டை ஆட முற்பட்டு கேட்ச் ஆனார். மேக்ஸ்வெல் மட்டும் ஒரு 20, 30 ரன்கள் வேகமாக அடித்து விட்டு சென்றிருந்தால் ஆர் சி பி க்கு இந்த நெருக்கடியை ஏற்பட்டு இருக்காது. மேக்ஸ்வெல் தொடர்ந்து சொதப்பி வருவது ஆர் சி பி அணி ரசிகர்களை கடுப்படைய செய்திருக்கிறது. மேக்ஸ்வெல் பந்துவீச்சில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தாலும், பேட்டிங்கில் அவர் அதிரடியாக விளையாடினால் மட்டுமே ஆர் சி பி அணிக்கு அது சாதகமாக அமையும்.

Story first published: Monday, March 25, 2024, 23:22 [IST]
Other articles published on Mar 25, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+