For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

போடு! ஆர்சிபியில் 2 டக் அவுட்.. சிஎஸ்கே அசத்தல் பவுலிங்.. அதிக முறை டக் அவுட்டான வீரர்கள் பட்டியல்

சென்னை : ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு சீசனில் முதல் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபாரமாக பந்து வீசியது. நடப்பு சாம்பியனான சிஎஸ்கே அணியில் தற்போது ருதுராஜ் தலைமையில் களமிறங்குகிறது. ஆர் சி பி அணி இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

இரண்டு மாதத்திற்கு பிறகு களத்திற்கு திரும்பிய விராட் கோலி, பெரிய அளவில் சாதிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அவர் பொறுமையாக விளையாட 20 பந்துகளில் 21 ரன்கள் சேர்த்தார். எனினும் முன்னாள் சிஎஸ்கே வீரரும் தற்போது ஆர்சிபி கேப்டனுமான டுபிளசிஸ் 23 பந்துகளில் 35 ரன்கள் விளாசினார்.

IPL 2024 - RCB Batters back to back duck and Glenn maxwell creates unforgettable record


இதில் எட்டு பவுண்டரிகள் அடங்கும். பெங்களூர் அணி நான்கு புள்ளி மூன்று ஓவரில் எல்லாம் 41 ரன்கள் எடுத்து அபாரமாக விளையாடிய நிலையில் டுபிளசிஸ் வெளியேறினார். இதனை அடுத்து ஆர் சி பி அணியின் நட்சத்திர வீரர் ரஜத் பட்டிதார் களமிறங்கினார். அவர் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் கூட சொதப்பிய நிலையில் ஐபிஎல் தொடரிலாவது ரன் எடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் வங்கதேச வீரர் முஸ்தபிஷேர் ரஹ்மான் அபாரமாக பந்து விசி தன்னுடைய முதல் ஓவரிலேயே ரஜத் பட்டிதாரரின் விக்கெட்டை வீழ்த்தினார். இதனைத் தொடர்ந்து தீபச்சாகர் பந்து வீசியபோது அதிரடி வீரர் மேக்ஸ்வெல் கோல்டன் டக் அவுட்டாக்கி வெளியேறினார். இதனால் ஆர் சி பி அணி 42 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இந்த நிலையில் ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை டக் அவுட் ஆன வீரர்கள் பட்டியலில் தற்போது மேக்ஸ்வெல், ராயுடு, ரசித் கான், பியூஸ் சாவ்லா ஆகியோரை பின்னுக்கு தள்ளியுள்ளார். ஐபிஎல் வரலாற்றில் தினேஷ் கார்த்திக் 17 முறை டக் அவுட்டாக்கி முதலிடத்தில் இருக்கிறார். ரோகித் சர்மா 16 முறை டக் அவுட் ஆகி இரண்டாவது இடத்தில் உள்ளனர்.

தற்போது ஆர்சிபி வீரர் கிளன் மேக்ஸ்வெல் 15 முறை டக் அவுட் ஆகி மூன்றாவது இடத்தில் இருக்கிறார்.சுனில் நரைன், மந்திப் சிங் ஆகியோரும் தலா 15 முறை டக் அவுட் ஆகி இருக்கிறார்கள். இதைப் போன்று பீயூஸ் சாவ்லா, அம்பத்தி ராயுடு,மணிஷ் பாண்டே ஆகியோர் 14 முறையும் ஹர்பஜன் சிங், பார்த்திவ் பட்டேல், ரஹானே ஆகியோர் 13 முறையும் டக் அவுட் ஆகியுள்ளனர்.

Story first published: Friday, March 22, 2024, 21:48 [IST]
Other articles published on Mar 22, 2024
English summary
IPL 2024 - RCB Batters back to back duck and Glenn maxwell creates unforgettable record போடு! ஆர்சிபியில் 2 டக் அவுட்.. சிஎஸ்கே அசத்தல் பவுலிங்.. அதிக முறை டக் அவுட்டான வீரர்கள் பட்டியல்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+