Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

CSK பேருந்து முன் RCB ரசிகர்கள் அடாவடி! பொறுமையாக நோட் பண்ண தோனி-அடுத்த வருடம் திருப்பி தருவது உறுதி

பெங்களூர் : ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ஆர் சி பி அணியிடம் சிஎஸ்கே அணி தோல்வியை தழுவி 48 மணி நேரத்திற்கு மேல் ஆகிறது. ஆனால் இன்னும் ஆர்சிபி செய்த செயல் ஒன்று ஒன்றாக தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியே ஆகி வருவது நின்ற பாடு இல்லை.

அந்த அளவிற்கு ஆசிபி ரசிகர்கள் சிஎஸ்கே அணியை கிண்டல் செய்து வெறுப்பேற்றி இருக்கிறார்கள். அது மட்டுமல்லாமல் சிஎஸ்கே வீரர்களிடமும் அவர்கள் தற்போது தவறாக நடந்து கொண்டிருக்கும் சம்பவம் சமூக வலைத்தளத்தில் வெளியாகி இருக்கிறது.

IPL 2024 - RCB Fans attrocities by showing their jersy in front of csk bus

பொதுவாக உலக கிரிக்கெட்டில் வங்கதேச கிரிக்கெட் ரசிகர்கள் தான் மிகவும் மோசமாக அந்நிய ரசிகர்களிடம் நடந்து கொள்வார்கள். தற்போது அவர்களையே மிஞ்சும் அளவுக்கு ஆர்சிபி ரசிகர்கள் அடாவடி செய்திருக்கிறார்கள். சிஎஸ்கே ஜெர்சி அணிந்து சென்ற ஒவ்வொரு ரசிகரையும் தேடி சென்று கிண்டல் செய்தது மட்டுமல்லாமல் அவர்களிடம் அத்துமீறி செய்திருக்கிறார்கள்.

இந்த நிலையில் தற்போது சமூக வலைதளத்தில் மேலும் ஒரு வீடியோ வைரலாகி இருக்கிறது. அதில் போட்டி முடிந்த பிறகு மைதானத்தில் இருந்து சிஎஸ்கே வீரர்கள் தங்களுடைய பேருந்தில் வெளியேறி இருக்கிறார்கள். அப்போது மைதானத்தில் வெளியே நின்று கொண்டிருந்த ஆர் சி பி ரசிகர்கள் பேருந்து முன் நின்று rcb என்று கத்தி இருக்கிறார்கள்.

மேலும் பல ரசிகர்கள் விராட் கோலியின் ஜெர்சியை காண்பித்து சிஎஸ்கே வீரர்களை பார்த்து வெறுப்பேற்றி இருக்கிறார்கள். மேலும் தோனி பேருந்து ஓரத்தில் அமர்ந்து கொண்டு இருந்தார். அப்போது தோனி இருந்த இடத்திற்கு முன்பு சில ரசிகர்கள் சுற்றிக்கொண்டு விராட் கோலியின் ஜெர்சியை காண்பித்து இருக்கிறார்கள்.

ஆனால் இதை அனைத்தையும் தோனி பொறுமையாக நோட் செய்து கொண்டார். அது மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த சிஎஸ்கே வீரர்களும் அதை அமைதியாக பார்த்து பேருந்தில் கடந்து சென்றனர். நிச்சயமாக ஆர் சி பி யின் அடாவடித்தனத்தை தோனி உட்பட சிஎஸ்கே வீரர்கள் அனைவரும் நோட் செய்து இருப்பார்கள். இதற்கு வட்டியும் முதலுமாக கண்டிப்பாக அடுத்த ஆண்டு நிச்சயம் சிஎஸ்கே திருப்பி தரும் எதிர்பார்க்கலாம்.

Story first published: Tuesday, May 21, 2024, 22:51 [IST]
Other articles published on May 21, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+