Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ச்சீ! சிஎஸ்கே மீது இவ்வளவு வன்மமா? எல்லை மீறிய ஆர்சிபி ரசிகர்கள்.. வச்சு செய்த தமிழக ரசிகர்கள்

மும்பை : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பரம எதிரிகள் அணிகளாக கருதப்படுவது என்றால், அது மும்பையும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் தான். ஏனென்றால் இருவரும் வெற்றிக்காக கடுமையாக பாடுபடுவார்கள். மேலும் இருவருமே ஐந்து முறை ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி இருக்கிறார்கள்.

ஆனால் அனைவருமே வச்சு செய்யும் அணி என்றால் அது ஆர்சிபி தான். அவர்களிடம் திறமையான வீரர்கள் இருந்தாலும், முக்கிய கட்டத்தில் சொதப்பி விடுவார்கள். இதனால் அவர்களால் ஒருமுறை கூட கோப்பையை கைப்பற்றியதில்லை.

IPL 2024 - RCB Fans worst behaviour after losing against CSK

இந்த நிலையில் rcb மகளிர் அணி டபிள்யு பி எல் தொடரை வென்ற நிலையில் அவர்களுக்கு ஒட்டுமொத்த ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்தனர். இந்த நிலையில் ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு சீசன் முதல் போட்டியில் ஆர்சிபி அணியை சிஎஸ்கே எளிதில் வீழ்த்தி இருக்கிறது. இதனை கொஞ்சம் கூட பொறுக்க முடியாத ஆர் சி பி ரசிகர்கள் எல்லை மீறி நிறவெறியை தூண்டும் விதத்தில் ஒரு சமூக வலைதள பதிவை போட்டு இருக்கிறார்கள்.

அதில், ஆர் சி பி ரசிகை என்று ஒரு பெண்ணையும் சிஎஸ்கே ரசிகைகள் என இன்னொரு பெண்ணையும் பதிவிட்டு கிண்டல் செய்து இருக்கிறார்கள். இதைப் பார்த்தவுடன் தமிழக ரசிகர்கள் கடும் கோபம் கொண்டனர். ஆர் சி பி ரசிகர்கள் ஏன் இவ்வளவு மோசமாக நடந்து கொள்கிறார்கள் என்று கருத்து தெரிவித்துள்ள சிஎஸ்கே ரசிகர்கள் பதிலுக்கு ஆர் சி பி ரசிகர்களை வச்சு செய்யும் அளவுக்கு மீம்ஸ்களை போட்டு வருகின்றனர்.

எங்களுடைய சிஎஸ்கே ரசிகைகள் எப்போதுமே வெற்றி பெற்று மகிழ்ச்சியாக இருப்பதாகவும், ஆனால் ஆர் சி பி ரசிகைகள் தான் எப்போதும் தோல்வியை சந்தித்து அழுது கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளனர். நிறவெறியை தூண்டும் விதமாக பதிவிட்டுள்ள ஆர் சி பி ரசிகர்கள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ரசிகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். களத்தில் சிஎஸ்கேவை சந்தித்து வெற்றி பெற முடியாத ஆர் சி பி அணியினர், விரக்தியில் இவ்வாறு தரம் தாழ்ந்து சமூக வலைத்தளத்தில் பதிவிடுவதாக ரசிகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர் .

Story first published: Sunday, March 24, 2024, 16:46 [IST]
Other articles published on Mar 24, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+