Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

7 போட்டியில் வெறும் 49 ரன்கள் தான்.. மோசமான ஃபார்மில் டுபிளசிஸ்.. ஆர்சிபிக்கு காத்திருக்கும் அபாயம்

பெங்களூரு : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இதுவரை ஒரு முறை கூட கோப்பையை வெல்லாத அதிக ரசிகர்களை கொண்ட அணி என்றால் அது ஆர்சிபி தான். விராட் கோலி கேப்டன் ஆக இருந்தபோது கோப்பையை வெல்ல முடியவில்லை என்பதால் அவர் அந்த பதவியில் இருந்து விலகிவிட்டார்.

இதனை அடுத்து சிஎஸ்கே அணியிலிருந்து சென்ற டுபிளசிஸ், தற்போது அந்த அணியின் கேப்டனாக விளங்கி வருகிறார். டுபிளசிஸ் கடந்த ஐபிஎல் சீசனில் 700 ரன்களுக்கு மேல் அடித்திருந்தார். 153 என்ற அளவில் இருந்தது.

IPL 2024 - RCB is in great danger as their captain faf duplessis in poor form


எனினும் டுபிளசிஸ் தனியாளாக போராடியும் ஆர் சி பி அணியால் கோப்பையை வெல்ல முடியவில்லை. இந்த நிலையில் டுபிளசிஸ் தற்போது மிகவும் மோசமான பார்மில் இருக்கிறார். ஜோகானஸ்பேர்க் சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக விளங்கும் டுபிளசிஸ் பேட்டிங்கில் கடுமையாக தடுமாறி வருகிறார். மேலும் அதற்கு முன் நடந்த T10 தொடரில் கூட டுபிளசிஸ் பேட்டிங் எடுபடவில்லை.


அவர் கடைசியாக விளையாடிய 7 போட்டிகளில் மொத்தமாகவே 49 ரன்கள் தான் அடித்திருக்கிறார். டுபிளசிஸ் இந்த மோசமான ஃபார்ம் ஆர்சிபி அணிக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆர் சி பி அணியின் பலமே அந்த அணியின் டாப் வரிசை வீரர்கள் தான். டுபிளசிஸ், கோலி, மேக்ஸ்வெல் என கே ஜி எஃப் என்று ரசிகர்கள் அந்த அணியை அழைப்பார்கள்.


தற்போது இதே மாதிரி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் அந்த அணியின் தொடக்கம் மிகவும் பாதிக்கப்படும். அது மட்டுமல்லாமல் டுபிளசிஸ் பார்ம் அவுட்டானால், அது விராட் கோலி மேல் தான் சுமையை ஏற்படுத்தும். விராட் கோலி எப்போதும் போல் இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் அவர் அதிரடி காட்ட வேண்டிய சூழலுக்கு தள்ளப்படுவார்.


டுபிளசிஸ் மோசமாக இதே போன்று விளையாடினால் மற்ற பேட்ஸ்மன்களுக்கு கடும் நெருக்கடி ஏற்படுத்தும். மொத்தமாகவே ஆர் சி பி அணி சில பேட்ஸ்மேன்களை நம்பி தான் இருக்கிறது. அதில் ஒரு பேட்ஸ்மேன் சொதப்பினார் என்றால் ஆர்சிபி அணிக்கு இம்முறையும் ஈசாலா கப் நமதே தான். இதனால் 39 வயதான டுபிளசிஸ் மீண்டும் பழைய பார்முக்கு திரும்ப வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

Story first published: Friday, January 19, 2024, 14:39 [IST]
Other articles published on Jan 19, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+