ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நடப்பு சீசனில் ஆர்சிபி அணி தான் மிகவும் பரிதாபமான நிலையில் இருக்கிறது. இதுவரை விளையாடிய 7 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்று, ஆறு போட்டிகளில் தோல்வியை தழுவி புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கிறார்கள்.
இந்த நிலையில் ஆர் சி பி அணியின் பந்துவீச்சு மிகவும் மோசமான வகையில் இருக்கிறது. பேட்டிங்கிற்கு சாதகமான ஆடுகளத்தில் 280 ரன்கள் மேல் அசால்ட்டாக கொடுத்து வருகிறார்கள். இந்த நிலையில் ஆர்சிபி அணி விளையாட போகும் அடுத்த ஏழு போட்டிகளில் அனைத்திலும் வெற்றி பெற வேண்டிய நெருக்கடியில் உள்ளது.

தற்போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக ரன் குவிப்புக்கு சாதகமான ஈடன் கார்டன் மைதானத்தில் விளையாடி வருகிறது. ஆர் சி பி அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. வழக்கம் போல் ஆர் சி பி அணி வீரர்களின் பந்துவீச்சை கொல்கத்தா வீரர்கள் அதிரடி காட்டி விளையாடி வந்தனர். இம்முறையும் 250 ரன்களுக்கு மேல் போகும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் கடந்த போட்டிகளில் சாதாரண வீரராக களமிறங்கி தன்னுடைய இயலாமையையும், கோபத்தையும் வெளிப்படுத்திக் கொண்டிருந்த விராட் கோலி, இன்று யாரையும் நம்பினால் சரி வராது என்று களத்தில் இறங்கினார். விராட் கோலி தன்னுடைய அனுபவத்தை பயன்படுத்தி எப்படி பந்து வீசினால் விக்கெட்டுகள் கிடைக்கும் என்பதை வீரர்களுக்கு எடுத்துரைத்தார்.
குறிப்பாக rcb வீரர் முகமது சிராஜ் நடப்பு சீசனில் தடுமாறி வருகிறார். சிராஜுக்கும் விராட் கோலிக்கும் ஒரு நல்ல நட்புணர்வு இருக்கிறது. இதனால் சிராஜிக்கு ஒரு திட்டம் போட்டுக் கொடுத்து கொல்கத்தாவின் பில் சால்ட் விக்கெட்டை ஆர் சி பி எடுத்தது. அதிரடியாக விளையாடி 14 பந்துகளில் 48 ரன்கள் எடுத்து பில் சால்ட் அதிவேகமாக அரை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.
அப்போது விராட் கோலி மைதானத்தில் உள்ள பெரிய பவுண்டரி நோக்கி பில் சால்ட் அடிக்கும் வகையில் பந்து வீசு என சிராஜிடம் கூறினார். அதற்கு தகுந்தார் போல் சிராஜும் வீச பில் சால்ட் ஆர்சிபி விரித்த வலையில் சிக்கி ஆட்டம் இழந்தார். இதேபோன்று யாஷ் தயாலிடம் பந்துவீசும் வேகத்தை குறைக்கும் படியும், ஆனால் அதை பேட்ஸ்மேன் கணிக்க கூடாது என்றும் கூறியிருந்தார். அதை போல் யாஷ் தயால் வீசிய பந்தை சுனில் நரேன் அதை தூக்கி அடித்து விராட் கோலியிடமே சிக்கிக்கொண்டார். ஒரு கேப்டன் செய்ய வேண்டியதை விராட் கோலி தற்போது செய்து வருவதாக ரசிகர்கள் பாராட்டியுள்ளனர்.