For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தோனியை விட அதிகம்.. சிறுத்தை போல் ரன் ஓடிய விராட் கோலி.. மணிக்கு எத்தனை கிமீ. வேகம் தெரியுமா?

பெங்களூரு : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பஞ்சாப் அணிக்கு எதிரான தங்களுடைய இரண்டாவது அதிக ஆட்டத்தில் ஆர்சிபி அணி வீரர் விராட் கோலி அபாரமாக ரன் சேர்த்து வருகிறார். டி20 உலக கோப்பையில் விராட் கோலியை சேர்க்க வேண்டுமா? என்ற விவாதம் அண்மையில் எழுந்தது.

இதற்கு காரணம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆடுகளங்கள் தோய்வாக இருக்கும் என்பதால் அது விராட் கோலியின் பேட்டிங்கிற்கு ஏற்ற வகையில் இருக்காது என்று தேர்வு குழுவினர் நினைத்தனர்.

IPL 2024 - RCB Star Virat kohli runs like a cheetah to take a doubles

இந்த நிலையில் இரண்டு மாதத்திற்கு பின்பு களத்திற்கு திரும்பிய விராட் கோலி சிஎஸ்கேவுக்கு எதிரான போட்டியிலேயே தான் பார்மில் இருக்கிறேன் என்பதை காட்டினார். இந்த நிலையில் இரண்டாவது லீக் ஆட்டத்தில் விராட் கோலி தன்னுடைய வழக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்தி பஞ்சாப் பந்துவீச்சை பிச்சி உதறினார்.

சிறப்பாக விளையாடிய விராட் கோலி 31 பந்துகளில் அரை சதம் கடந்தார். இந்த நிலையில் சர்வதேச கிரிக்கெட்டில் எப்போதுமே சிறந்த வீரராக விளங்குபவர்கள் நன்றாக ரன் ஓடுவார்கள்.உதாரணத்திற்கு சச்சின் டெண்டுல்கர், தோனி ஆகியோரை நீங்கள் எடுத்துக் கொண்டால் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு வேகமாக சிங்கிள்ஸ் ஓடி ரன்களை எடுப்பார்கள்.

குறிப்பாக தோனியின் ஓட்டம் தான் உலக கிரிக்கெட்டிலே மிகவும் பிரசித்தி பெற்றது. ஏனென்றால் தோனி கிட்டத்தட்ட உசைன் போல்ட் அளவுக்கு வேகமாக ரன் ஓடுவார் என்று ரசிகர்களும் பாராட்டுவார்கள். இந்த நிலையில் பெங்களூருவில் நடைபெற்ற பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் விராட் கோலி அபாரமாக போடி ரன்களை சேர்த்தார்.

பெங்களூர் சின்னசாமி மைதானம் சுற்றளவு மிகவும் சிறியது.

மேலும் பந்து வேகமாக பவுண்டரிக்கு செல்லும். இது விளையாடும் போது நாம் அடிக்கும் பந்து பில்டரிடம் வேகமாக செல்லும். இதனால் இங்கு டபுள் ஓடுவது மிகவும் கடினம். ஆனால் இப்படிப்பட்ட சிறிய மைதானத்திலேயே, விராட் கோலி வேகமாக ஓடி டபுள் ரன்களை எடுத்தார். அப்போது விராட் கோலியின் வேகத்தை கணக்கிட்ட போது அவர் மணிக்கு 26 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடி ரன்களை எடுப்பது தெரிய வந்தது. கிரிக்கெட்டைப் பொறுத்தவரை இப்படி சின்ன சின்ன விஷயம் கூட ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த தாக்கத்தை தான் விராட் கோலி இன்று ஏற்படுத்தி இருக்கிறார்.

Story first published: Monday, March 25, 2024, 23:04 [IST]
Other articles published on Mar 25, 2024
English summary
IPL 2024 - RCB Star Virat kohli runs like a cheetah to take a doubles
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+