For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சிஎஸ்கேக்கு ஆப்பு வைத்த ஆர்சிபி.. பிளே ஆப் பந்தயத்தில் இணைந்த கோலி படை.. டெல்லிக்கு செம டிவிஸ்ட்

பெங்களூரு : ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு சீசன் தற்போது இறுதி கட்டத்தை எட்டி இருக்கிறது .பிளே ஆப் சுற்றுக்கு எந்த அணி செல்ல போகிறது என்பதை எதிர்நோக்கி ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். கொல்கத்தா, ராஜஸ்தான் அணி பிளே ஆப் வாய்ப்பை கிட்டத்தட்ட உறுதி செய்துள்ளது.

இந்த நிலையில் சென்னையும், ஹைதராபாத் அணியும் 14 புள்ளிகளுடன் முறையே மூன்றாவது மற்றும் நான்காவது இடத்தில் உள்ளது. இந்த நிலையில் டெல்லி லக்னோ, ஆர் சி பி, குஜராத் என நான்கு அணிகளுமே 14 புள்ளிகளை பெறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

IPL 2024 RCB vs DC - RCB Win gives huge boast for their Playoff chance

குறிப்பாக நடப்பு சீசனின் முதல் பாதியில் கடைசி இடத்தில் இருந்த ஆர் சி பி அணி தற்போது அடுத்தடுத்து வெற்றிகளை பெற்று புள்ளி பட்டியலில் முன்னேறி வருகிறது. இந்த நிலையில் டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஆர் சி பி அணி அபார வெற்றி பெற்றது. பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதை அடுத்து களமிறங்கிய rcb அணியில் விராட் கோலி 13 பந்துகளில் 27 ரன்கள் சேர்த்தார். இதில் மூன்று சிக்சர் ஒரு பவுண்டரி என ஸ்ட்ரைக் ரேட் 207 என்ற அளவில் இருந்தது. கேப்டன் டுபிளசிஸ் 6 ரன்களில் ஆட்டம் இழக்க, வில் ஜாக்ஸ் தன்னுடைய அதிரடியை காட்டி 29 பந்துகளில் 41 ரன்கள் சேர்த்தார். யாருமே எதிர்பாராத வகையில் ரஜத் பட்டிதார் தற்போது முக்கிய கட்டத்தில் பார்முக்கு வந்து ஆர்சிபியை காப்பாற்றி வருகிறார்.

மூன்று சிக்ஸர், 3 பவுண்டரி என 32 பந்துகளில் அவர் 52 ரன்கள் சேர்த்தார். கேமரன் கிரீன் 32 ரன்கள் எடுக்க ஆர்சிபி அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் எடுத்தது. 188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது. டெல்லி அணியில் ரிஷப் பண்ட், இன்றைய ஆட்டத்தில் இல்லாதது மிகப்பெரிய பின்னடைவு ஏற்படுத்தியது.

இதனால் டேவிட் வார்னர், அபிஷேக் போரெல் இரண்டு ரன்களிலும் ஜேக் பிரேஷர் 22 ரன்களிலும் சாய் கோப் 29 ரன்களிலும் குமார் குசாக்ரா இரண்டு ரன்களிலும் டிஸ்டன்ஸ் ஸ்டெப்ஸ் மூன்று ரன்களிலும் அடுத்தடுத்து வெளியேறினர். டெல்லி அணி கடுமையாக தடுமாறிய நிலையில் கேப்டன் அக்சர் பட்டேல், மட்டும் அபாரமாக நின்று 39 பந்துகளின் 57 ரன்கள் சேர்த்தார்.

இதில் மூன்று பவுண்டரி,5 சிக்சர்கள் அடங்கும் மற்ற வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்கம் ரன்களில் ஆட்டம் இழந்தனர். இதனால் டெல்லி அணி 140 ரன்களில் ஆட்டம் இழந்தது. இந்த வெற்றியின் மூலம் தற்போது ஆர்சிபி அணி 12 புள்ளிகளை பெற்று ஐந்தாவது இடத்திற்கு முன்னேறி இருக்கிறது.

Story first published: Sunday, May 12, 2024, 23:32 [IST]
Other articles published on May 12, 2024
English summary
IPL 2024 RCB vs DC - RCB Win gives huge boast for their Playoff chance சிஎஸ்கேக்கு ஆப்பு வைத்த ஆர்சிபி.. பிளே ஆப் பந்தயத்தில் இணைந்த கோலி படை.. டெல்லிக்கு செம டிவிஸ்ட்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+