For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

என்ன டா இப்படி ஏமாத்துறீங்க? இது எப்படி அவுட்டாகும்? நடுவரின் தவறான முடிவு.. கடுப்பான விராட் கோலி

கொல்கத்தா : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா, ஆர்சிபி அணி மோதிய ஆட்டத்தில் மிகப்பெரிய சர்ச்சை ஒன்று வெடித்திருக்கிறது. நடப்பு ஐபிஎல் தொடரில் டி ஆர் எஸ் பதிலாக ஸ்மார்ட் ரிவ்யூ சிஸ்டம் என்ற புதிய முறை கொண்டுவரப்பட்டிருக்கிறது. அதன்படி டிஆர்எஸ் சிஸ்டத்தில் பல மாற்றங்களை செய்து இந்த புதிய முறையை பிசிசிஐ கடைப்பிடித்து வருகிறது.

குறிப்பாக உயரமாக வரும் பந்தை பேட்ஸ்மேன் அடிக்கும் போது அது கேட்ச் ஆனால் நோபல் என்று அறிவிக்கப்படும். ஆனால் ஒவ்வொரு பேட்ஸ்மனின் உயரமும் வேறு மாதிரி இருக்கும் என்பதால் இந்த பந்து உயரமாக வந்ததா இல்லையா என்பதை கணிக்க கடினமாக இருக்கும்.

IPL 2024 RCB vs KKR- Virat kohli argued with umpires over short ball wrong decision

இந்த சிக்கலை தீர்க்கும் விதமாக ஒவ்வொரு பேட்ஸ்மேனின் உயரத்தையும் கணக்கிட்டு அதில் அனுமதிக்கப்பட்ட அளவு எது என்று முன்கூட்டியே குறிக்கப்பட்டிருக்கும். இந்த சூழலில் பந்து பேட்ஸ்மனின் வைஸ்ட் ஹைட்டுக்கு மேலே செல்கிறதா கீழே பந்து செல்கிறதா என்பதை தீர்மானிக்க முடியும். இப்படிதான் விராட் கோலி பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது, ஹர்ஷித் ரானா புல்டாஸ் பந்து ஒன்றை வீசினார்.

அப்போது அதனை கிரீசுக்கு வெளியே விராட் கோலி எதிர்கொண்டு அடிக்க அது பவுலரிடம் கேட்ச் ஆனது. பந்து உயரமாக வந்தது என்பதால், இது அவுட் ஆக இருக்காது என்று பலரும் கருதினர். இந்த நிலையில் கள நடுவர் மூன்றாம் நடுவரின் உதவியை நாடும் போது விராட் கோலி கிரீசை விட்டு வெளியே நிற்பதை கண்டுகொள்ளாத நடுவர் விராட் கோலி உயரத்தை வைத்து பந்து வேஸ்ட் ஹைட்டுக்கு கீழே சென்றது என முடிவு எடுத்து இதற்கு அவுட்டு வழங்கினார்.

நடுவர் இதற்கு அவுட்டு வழங்கியதும் அங்கிருந்த வீரர்களை அதிர்ச்சி அடைந்தனர். விராட் கோலி ஷாக் ஆகி நெஞ்சுக்கு நேராக வரும் பந்தை தாம் அடித்ததாகவும் அது எப்படி அவுட் என்று கூற முடியும் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஆர் சி பி எனின் கேப்டன் டுபிளசிஸ் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.

எனினும் ஸ்மார்ட் ரிவ்யூ சிஸ்டத்தில் வீரரின் உயரத்தை வைத்து இந்த முறையில் அவுட் வழங்கப்பட்டதாக கள நடுவர்கள் எடுத்துரைத்தனர் .இந்த அவுட்டு முறையை விவரித்த கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே ஆசிபிடமிருந்து விராட் கோலியின் விக்கெட் திருடப்பட்டு விட்டதாக கருத்து தெரிவித்துள்ளார்.

Story first published: Sunday, April 21, 2024, 19:18 [IST]
Other articles published on Apr 21, 2024
English summary
IPL 2024 RCB vs KKR- Virat kohli argued with umpires over short ball wrong decision என்ன டா இப்படி ஏமாத்துறீங்க? இது எப்படி அவுட்டாகும்? நடுவரின் தவறான முடிவு.. கடுப்பான விராட் கோலி
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+