For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

காவ்யா மாறனை கையிலேயே பிடிக்க முடியல! SRH ஆட்டத்தால் ஹாப்பி ..ரஜினி சொன்னதை நடத்தி காட்டிய கலாநிதி

பெங்களூர் : ஐபிஎல் கிரிக்கெட்லில் சன்ரைசர்ஸ் அணி அபாரமாக விளையாடி வருவது அந்த அணியின் உரிமையாளரான காவியா மாறனை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் அணி அபாரமாக விளையாடி வருகிறது.

விளையாடிய 6 போட்டிகளில் நான்கு வெற்றி, இரண்டு தோல்வி என எட்டு புள்ளிகள் உடன் புள்ளி பட்டிகளில் நான்காவது இடத்தில் தற்போது அவர்கள் இருக்கிறார்கள். இந்த ஆறு போட்டிகளில் இரு முறை அவர்கள் ஐபிஎல் தொடரில் பல சாதனைகளை உடைத்து இருக்கிறார்கள்.

IPL 2024 RCB vs SRH - Kavya Maran was super Happy after their team creating records

குறிப்பாக ஐபிஎல் வரலாற்றில் ஒரு அணி அடித்திருக்கும் அதிகபட்ச ஸ்கோரை இரண்டு முறை சன்ரைசர்ஸ் அணி முறியடித்திருக்கிறது. அதுவும் மும்பை மற்றும் ஆர்சிபி போன்ற பலமான அணிக்கு எதிராக இத்தகைய சாதனையை படைத்திருக்கிறது. இதனால் உற்சாக கடலில் காவியா மாறன் மிதந்து வருகிறார். எப்போதுமே ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் காவியா மாறன் சோகமாக உட்கார்ந்து இருக்கும் காட்சியை தான் ரசிகர்கள் பார்த்து பழகியதுண்டு.

ஆனால் இதற்கு மாறாக காவ்யா மாறன் இந்த சீசனில் மகிழ்ச்சியாக இருக்கிறார். ஜெய்லர் படத்தின் இசை வெளியீட்டு விழாவின்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் காவ்யா மாறன் மற்றும் சன்ரைசர்ஸ் அணி குறித்து பேசினார் அதில் சன்ரைசர்ஸ் அணி தொடர்ந்து தோல்வியை தழுவி வருகிறது. அப்போதெல்லாம் காவ்யா மாறனை டிவியில் பார்க்கும்போது மிகவும் சோகமாக இருக்கிறது .

அவர் எப்போதுமே தொலைக்காட்சியில் சோகமாக இருக்கிறார். அவர் சந்தோஷப்படும் வகையில் அணியை மாற்றுங்கள். வெற்றி பெறுங்கள் என கூறியிருந்தார். ரஜினி சொன்னதை தீவிரமாக எடுத்துக் கொண்ட கலாநிதி மாறன். மினி ஏலத்தில் தங்களுடைய அணியை ஒட்டுமொத்தமாக மாற்றி இருக்கிறார்.

கேப்டன் பொறுப்பை உலக கோப்பை வென்ற பாட் கம்மின்ஸ் மற்றும் அதிரடி வீரர் டிராவிஸ் ஹெட் உள்ளிட்டோரை சன்ரைசர்ஸ் அணி இணைத்ததன் மூலம் தற்போது அவர்கள் உடைய செயல்பாடு தலைக்கீழ் மாறி இருக்கிறது. பந்துவீச்சில் சன்ரைசர்ஸ் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டும். இருப்பினும் பேட்டிங்கில் அவர்கள் அதிரடி காட்டி வருகிறார்கள்.

இதனால் காவ்யா மாறன் ஹாப்பி அண்ணாச்சி என்பது போல் ஒவ்வொரு போட்டியிலும் இருக்கிறார். காவியா மாறன் தொடர்ந்து இதே போல் ஜாலியாக இருப்பாரா? இல்லை சன்ரைசர்ஸ் அணி போக போக தங்களுடைய வேலையை காட்டுமா என்பதை பொறுத்து தான் பார்க்க வேண்டும்.

Story first published: Tuesday, April 16, 2024, 6:31 [IST]
Other articles published on Apr 16, 2024
English summary
IPL 2024 RCB vs SRH - Kavya Maran was super Happy after their team creating records காவ்யா மாறனை கையிலேயே பிடிக்க முடியல! SRH ஆட்டத்தால் ஹாப்பி ..ரஜினி சொன்னதை நடத்தி காட்டிய கலாநிதி
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+