Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆர்சிபி வேண்டாம் என ஒதுக்கிய 3 வீரர்கள்.. ஐபிஎல் 2024 சீசனில் பட்டையை கிளப்பும் அதிசயம்

பெங்களூர் : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பல திறமையான வீரர்கள் இருந்தும் விராட் கோலி போன்ற கேப்டன் கடந்த காலங்களில் இருந்தும் அந்த அணியால் ஏன் ஒருமுறை கூட சாம்பியன் பட்டத்தை வெல்ல முடியவில்லை என்று ரசிகர்கள் புலம்பி வருவார்கள்.

அதற்கு காரணம் rcb அணி எடுக்கும் முட்டாள்தனமான முடிவுகள் தான் என்பது மீண்டும் ஒருமுறை உறுதியாகி இருக்கிறது. சமூக வலைத்தளத்தில் யாராவது முட்டாள்தனமாக பேசினால் அவர்களை நீ ஜோக்கர் கிடையாது. முழு சர்க்கஸுமே நீதான் என்று கூறுவார்கள்.

IPL 2024 - RCB Worst decision to go away 3 players became star for other team

அதற்கு ஏற்ற அணி என்றால் அது ஐபிஎல் தொடரில் ஆர்சிபி தான். ஆர் சி பி அணி கடந்த காலங்களில் இந்த வீரர்கள் வேண்டாம் என கைவிட்ட மூன்று பேர் தற்போது ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு தொடரில் பட்டையை கிளப்புகிறார்கள் என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா? இந்த பட்டியலில் முதலிடத்தை பிடித்திருப்பவர் சிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரர் சிவம் துபே தான்.

சிவம் துபே ஆர்சிபி அணிக்காக விளையாடியவர், அந்த அணியில் இருந்து சிவம் துபே நீக்கப்பட்ட நிலையில் தற்போது அவர் சிறப்பாக விளையாடி வருகிறார். இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்திருப்பவர் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர் ஹென்றிச் கிளாசன். தற்போது 8 போட்டிகள் முடிவடைந்த நிலையில் கிளாசன் ஆரஞ்சு நிற தொப்பியை கைப்பற்றி இருக்கிறார்.

சிவம் துபே ஆர் சி பி அணிக்காக விளையாடியவர், அந்த அணியில் இருந்து சிவம் துபே போய் நீக்கப்பட்ட நிலையில் தற்போது அவர் சிறப்பாக விளையாடி வருகிறார். இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்திருப்பவர் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர் ஹென்றிச் கிளாசன். தற்போது 8 போட்டிகள் முடிவடைந்த நிலையில் கிளாசன் ஆரஞ்சு நிறம தொப்பியை கைப்பற்றி இருக்கிறார்.

குறிப்பாக மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஹென்றிச் கிளாசன் 34 பந்துகளில் 80 ரன்கள் விளாசினார். இதில் ஏழு சிக்ஸரும், நான்கு பவுண்டரிகளும் அடங்கும். இதற்கு முன்பு கேகேஆர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கூட கிளாசன் 29 பந்துகளில் 63 ரன்கள் விளாசினார். இதில் 8 சிக்ஸர்கள் அடங்கும். இந்த நிலையில் கிளாசனும் ஆர்சிபி அணிக்காக தேர்வு செய்யப்பட்ட வீரர் தான். அந்த அணி அவரை சரியாக பயன்படுத்தாமல் விலக்கி கொண்டது.

இந்தப் பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்திருப்பவர் தற்போது ஹைதராபாத் அணியில் இருக்கும் டிராவஸ் ஹெட் தான். இவர் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 24 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு 62 விளாசினார். இதில் ஒன்பது பவுண்டரிகளும், மூன்று சிக்சர்களும் அடங்கும். கடந்த ஒரு ஆண்டாக டெஸ்ட், ஒருநாள், டி 20 என அனைத்து போட்டிகளுமே அபாரமாக விளையாடி வருகிறார். இந்த நிலையில் இவரும் rcb அணியில் இருந்தார். ஆனால் அவரை சரியாக பயன்படுத்திக் கொள்ளாமல் ஆர்சிபி அணி நீக்கியது.

Story first published: Thursday, March 28, 2024, 18:32 [IST]
Other articles published on Mar 28, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+