Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

RCB ஜெர்சியில் திடீரென்று கலந்த நீலம்.. இதுக்கு பின்னாடி இப்படி ஒரு கதையா? கண்ணாடியை திருப்பி காமெடி

பெங்களூரு : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ஆர் சி பி அணி தங்களுடைய 17 வது சீசனில் களமிறங்குகிறது. இதுவரை அவர்கள் பலமுறை இறுதிப் போட்டிக்கு சென்றாலும் ஒரு முறை கூட கோப்பையை வென்றது கிடையாது. ஆனால் ஆர் சி பி யின் மகளிர் அணி மகளிர் பிரீமியர் லீக் கோப்பையை வென்று சாதனை படைத்திருக்கிறது.

இதனால் மகளிர் போல் ஆடவர் அணியும் சாம்பியன் பட்டத்தை வெல்ல வேண்டும் என்ற உத்வேகத்தில் இருக்கிறார்கள். இந்த நிலையில் rcb அணியில் நிகழ்ந்த ஒரு மாற்றம் ரசிகர்களின் கவனத்தைப் பெற்று இருக்கிறது.

RCB New Jersey

ஆர்சிபி எப்போதுமே சிவப்பு நிற ஜெர்சியை தான் பயன்படுத்தி இருக்கிறார்கள். ஏதாவது ஒரு போட்டியில் மரம் நடுவது தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்த பச்சை நிற ஜெர்சியை பயன்படுத்துவார்கள். ஆர் சி பி அணி சிவப்பில் லேசான மஞ்சள் கலந்த ஜெர்சியை பயன்படுத்தி இருக்கிறார்கள்.

கடந்த சீசன் எல்லாம் சிவப்பு நிறத்தில் கருப்பு கலந்த ஜெர்சியை அணிந்திருந்தார்கள். இந்த நிலையில் தற்போது மீண்டும் தங்களுடைய ஜெர்சியை ஆர் சி பி அணி மாற்றிவிட்டது. எப்போதுமே சிவப்பை மட்டுமே பயன்படுத்தி வந்த ஆர் சி பி அணி, திடீரென்று நீல நிறத்தை தங்களுடைய ஜெர்சியில் கலந்து இருக்கிறது. இதேபோன்று அணியின் பெயரையும் பெங்களூர் என்பதற்கு பதில் பெங்களூரு என்றும் மாற்று இருக்கிறது.

இந்த நிலையில் ஆர் சி பி அணி ஏன் இவ்வாறு நீல நிறத்தை கலந்து இருக்கிறது என்ற கேள்வி எழுந்திருக்கிறது. இதற்கு காரணம் இந்திய அணியின் ஜெர்ஸி எப்போதுமே நீல நிறத்தில் இருக்கும். இந்திய கிரிக்கெட் அணியின் அடையாளத்தை ஆர் சி பி ஜெர்சியில் கொண்டு வர தான் இவ்வாறு மாற்றம் நிகழ்ந்திருப்பதாக ரசிகர்கள் நம்பினர்.

ஆனால் உண்மை இதுவல்ல. ஆர் சி பி அணி ஜோதிடத்தை வைத்து தான் இந்த மாற்றத்தை செய்திருக்கிறது என்ற தகவல் வெளியாகி உள்ளது. ஆர் சி பி அணிக்கு அதிர்ஷ்டம் இல்லாததால் தான் 16 முறையும் கோப்பை வெல்ல முடியவில்லை. தற்போது நீல நிறத்தை ஜெர்சியில் கலந்திருப்பதன் மூலம் ஆர் சி பி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்றும் சிலர் நம்புகின்றனர்.

ஆனால் இதை கேட்கும் ரசிகர்கள் அட்டகாசம் படத்தில் கண்ணாடியை திருப்பினால் எப்படி ஜீவா ஆட்டோ ஓடும் என்ற காமெடியை மேற்கோள் காட்டி ஆர் சி பி அணி களத்தில் நன்றாக விளையாட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர்.

Story first published: Thursday, March 21, 2024, 8:30 [IST]
Other articles published on Mar 21, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+