Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சிஎஸ்கேவின் கனவை கலைத்த காவ்யா மாறன்.. மீண்டும் பதிலடி கொடுத்த காசி தாத்தா..CSK பலம் அதிகரிப்பு

துபாய் : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சிஎஸ்கே அணி மினி ஏலத்தில் முன் எப்போதும் போல் இல்லாத அளவு ஸ்டார் வீரர்களை குறி வைத்து ஏலத்தில் ஆக்ரோஷமாக செயல்பட்டது.

இந்த நிலையில் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இறுதி ஆட்டத்தில் ஸ்டார் வீரராக திகழ்ந்து ஆஸ்திரேலியாவுக்கு கோப்பையை வாங்கி தந்த டிராவிஸ் ஹெட் மீது சிஎஸ்கே ஆர்வம் காட்டியது.

IPL 2024 - Reason for CSK shows interest to travis head -rachin ravindra and shardul

டிராவிஸ் ஹெட் பெயர் வந்த உடனே சிஎஸ்கே தான் முதலில் ஏலத்தில் கேட்டது. சிஎஸ்கே அணிக்கு ஏற்கனவே தொடக்க வீரர்கள் இருக்கிறார்கள். இந்த நிலையில் ஏன் டிராவிஸ் ஹெட்டை நோக்கி சிஎஸ்கே சென்றது என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் இருந்தது. இதற்கு காரணம் டிராவிஸ் ஹெட் சுழற்பந்து வீச தெரியும். மேலும் அவர் தொடக்க வீரராக மட்டுமல்லாமல் நம்பர் மூன்றாவது வீரராகவும் டி20 கிரிக்கெட்டில் அடித்து விளையாட கூடியவர்.

அதேசமயம் தற்போது கான்வே போதிய ஃபார்ம் இல்லாமல் இருக்கிறார். இதனால் அவரை நம்புவதும் ஆபத்தாகும். இதனால் டிராவிஸ் ஹெட்டை கூடுதலாக எடுத்துவிட்டு நம்பர் 3வது வீரராக பயன்படுத்தலாம். இல்லையெனில் தொடக்க வீரராகவும் பயன்படுத்தலாம் என்ற யோசனையில் சிஎஸ்கே இருந்தது.

ஆனால் வழக்கம் போல் காவியா மாறன் உள்ளே புகுந்து ஆட்டத்தை கலைத்து விட்டார். இதனால் டிராவிஸ் ஹெட் தற்போது ஆறு கோடியே 80 லட்சம் ரூபாய்க்கு ஹைதராபாத் அணியிடம் சென்றார். இந்த நிலையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரச்சின் ரவீந்திராவை சிஎஸ்கே அணி தட்டி தூக்கியது. ரவீந்திரா பேட்டிங் மற்றும் சுழற்பந்தவீச்சிலும் கலக்கக் கூடியவர். இதனால் மொயின் அலிக்கு நல்ல மாற்று வீரராக ரவீந்திரா திகழ்வார்.

இதனால் சிஎஸ்கே அவரை குறைந்த விலையான ஒரு கோடியே 80 லட்சத்திற்கு எடுத்து அசத்தியது. இதன் மூலம் சிஎஸ்கே அணி எதிர்காலத்தை கருத்தில் கொண்டு ரச்சின் ரவீந்திரா வாங்கி இருக்கிறது. சிஎஸ்கே அணியில் பெரிய குறையாக இருந்தது. அனுபவம் வாய்ந்த இந்திய வேகபந்துவீச்சாளர் இல்லை என்பதுதான் அந்த வகையில் ஷர்துல் தாக்கூரை சிஎஸ்கே அணி நான்கு கோடி ரூபாய்க்கு தட்டி தூக்கியது. இதன் மூலம் தீபக் சாஹர், ஷர்துல் தாக்கூர் இனி அணியில் வேகப்பந்துவீச்சாளராக திகழ்வர்.

Story first published: Tuesday, December 19, 2023, 14:38 [IST]
Other articles published on Dec 19, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+