Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சோகமாக இருந்தால் ஏதும் மாறாது.. ஐபிஎல் தொடரில் கண்டிப்பாக விளையாடுவேன்.. ரிஷப் பண்ட் கருத்து

மும்பை : 2022 ஆம் ஆண்டு இறுதியில் பெரும் கார் விபத்தில் சிக்கிய ரிஷப் பண்ட் கடந்த ஒரு ஆண்டாக எந்தவித கிரிக்கெட் போட்டியிலும் பங்கேற்காமல் இருந்து வருகிறார். இந்த நிலையில் பிழைத்தது புது உயிர் என்பது போல் மீண்டு வந்துள்ள ரிஷப் பண்ட் தற்போது முழு உடல் தகுதியை பெரும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

கடந்த ஒரு ஆண்டாக பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் ரிஷப் பந்த் பயிற்சி செய்து வந்தார். இந்த நிலையில் ஐபிஎல் மினி ஏலத்தில் டெல்லி அணிக்காக பங்கு பெற்ற பண்ட், தற்போது அங்கு விடுமுறையில் இருந்து வருகிறார்.

IPL 2024- Rishabh pant speak about his fitness and dealing the situation


தோனி குடும்பத்துடன் ரிஷப் பண்ட் பல போட்டிகளில் பங்கேற்று வருகிறார். இந்த நிலையில் பண்ட் அளித்துள்ள பேட்டியில் வாழ்க்கையில் கடினமான காலகட்டத்தை நேர்மறையான எண்ணங்களுடன் எதிர்கொண்டு வருவது தான் சிறந்த வழி. எப்போதும் சிரித்துக் கொண்டே இருக்க வேண்டும். சோகமாக இருப்பதால் எந்த சூழலும் மாறாது.

மகிழ்ச்சியாகவும் மனிதத் தன்மத்துடன் இருந்தும் சூழலை சிறப்பாக மாற்ற முயற்சி செய்யுங்கள். உங்கள் வாழ்க்கையின் நல்ல நாட்களுக்காக நீங்கள் கடுமையாக உழையுங்கள். என்னைப் பொறுத்தவரை நான் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இருந்ததை விட தற்போது சிறப்பாக இருப்பதாக உணர்கிறேன். நான் இன்னும் நூறு சதவீதம் உடல் தகுதியை எட்டவில்லை.

ஆனால் இன்னும் சில மாதத்தில் முழு உடல் தகுதியை எட்டி விடுவேன் என்று ரிஷப் பண்ட் கூறியுள்ளார். ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பிங் செய்ய முடியும் என்று 100% தெரியாததால் டெல்லி அணி குமார் குசாகாரா என்ற இளம் விக்கெட் கீப்பரை 7.20 கோடி ரூபாய் கொடுத்து மினி ஏலத்தில் வாங்கி இருக்கிறது குறிப்பிடத்தக்கது.
Story first published: Sunday, December 24, 2023, 20:04 [IST]
Other articles published on Dec 24, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+