Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரோகித் அண்ணா.. முடியல, நீங்களே பார்த்துக்குங்க! ஒதுங்கிய ஹர்திக்.. ஃபில்டிங் செட் செய்த ஹிட்மேன்

மும்பை : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி சம அடி வாங்கி துண்ட காணும், துணிய காணும் என்று ஓடியது. ஐதராபாத்தில் நடைபெற்ற எட்டாவது லீக் ஆட்டத்தில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி களம் இறங்கியது.

ரன் குவிப்புக்கு சாதகமான ஆடுகளத்தில் ஹர்திக் பாண்டியா வித்தியாசமாக செயல்படுகிறேன் என்று கூறி டாசை வென்ற பிறகு பந்துவீச்சை தேர்வு செய்தார். அப்போதே இது தவறான முடிவு என்று பல கிரிக்கெட் வல்லுனர்கள் தெரிவித்திருந்தனர்.

IPL 2024 - Rohit sharma sets fielders after SRH Brilliant batting

இதை அடுத்து முதலில் பந்து வீசியபோது மும்பை இந்தியன்ஸ் அணி பந்துவீச்சாளர்கள் செம அடி வாங்கினார்கள். குறிப்பாக சன்ரைசர்ஸ் வீரர்கள் டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் ஷர்மா ஆகியோர் மும்பை பந்துவீச்சை பொளந்து கட்டினர். இதனால் புதிய கேப்டனான ஹர்திக் பாண்டியா எப்படி பில்டிங்கை செட் செய்வது என்று தெரியாமல் தடுமாறினார்.

கடந்த போட்டியில் ரோகித் சர்மாவை அங்கேயும் இங்கேயும் அலைக்கழித்து ரசிகர்களிடம் கெட்ட பெயரை வாங்கிய ஹர்திக் பாண்டியா, இன்று நேரடியாக ரோகித் சர்மாவிடமே சென்று நீங்களே பில்டிங் செட் செய்து விடுங்கள் என்று கூறியிருக்கிறார். மும்பை அணி அடி வாங்குவதை பார்த்துக்கொண்டு பொறுத்துக் கொள்ள முடியாத ரோகித் சர்மாவும் இவரை நம்பினால் சரி வராது என்று கூறி ஹர்திக் பேச்சைக் கேட்டு அவரும் களத்தில் இறங்கினார்.

ஒரு கட்டத்தில் கேப்டன் ஹர்திக் பாண்டியாவை ரோகித் சர்மா பில்டிங்கில் நீ அங்கே போய் நில் என்று கூறிய சம்பவமும் நடைபெற்றது. கேப்டனாக இருக்கும் ஹர்திக் பாண்டியாவும், ரோகித் சர்மா பேச்சைக் கேட்டு பவுண்டரி லைனில் போய் நின்றார். இதை சுட்டிக்காட்டி உள்ள ரசிகர்கள் இதை கடந்த போட்டியிலே செய்திருக்கலாமே.

தற்போது மும்பை அணி அடி வாங்கிய பிறகுதான் ஹர்திக் பாண்டியாவுக்கு புத்தி வந்திருக்கிறதா என்றும் கேள்வி கேட்டு வருகின்றனர். ஆனால் ரோகித் சர்மா பில்டிங்கை நிறுத்தியும் சன்ரைசர்ஸ் அணியின் ரன் குவிக்கும் வேகத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் டென்ஷனான ரோகித் சர்மா தன்னுடைய நகத்தை கடித்துக் கொண்டே பவுண்டரி லைனில் நின்று கொண்டிருந்தார்.

Story first published: Wednesday, March 27, 2024, 21:32 [IST]
Other articles published on Mar 27, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+