Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தொடர்ந்து 4வது தோல்வி.. வீரர்களை சரமாரியாக திட்டிய சஞ்சு சாம்சன்..முக்கிய கட்டத்தில் கோட்டை விட்டது

கவுகாத்தி : ஐபிஎல் 2024-ம் ஆண்டு சீசனில் பலம் வாய்ந்த அணியாக ராஜஸ்தான் ராயல்ஸ் விளங்கி வந்தது. தொடர்ந்து வெற்றிகளைக் குறித்து வந்த ராயல்ஸ் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருந்தது. ஆனால் தற்போது அந்த அணிக்கு தோல்வி மேல் தோல்வி வந்து குவிந்து வருகின்றது.

தொடர்ந்து நான்காவது தோல்வியை தற்போது ராஜஸ்தான் அணி வெற்றி இருக்கிறது. கடந்த போட்டியில் சிஎஸ்கே அணியிடம் தோற்ற ராயல்ஸ் இன்று பஞ்சாப் அணிக்கு எதிராக ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் விழுந்துவிட்டனர்.

IPL 2024 - RR Captain Sanju samson slams Team members for losing 4th straight loss

எனினும் புள்ளி பட்டியலில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, இரண்டாவது இடத்தில் நீடிக்கிறது. ராஜஸ்தான் ராயல்ஸ் கடைசி போட்டியிடும் தோற்று சிஎஸ்கே அணி ஆர் சி பி ஐ வீழ்த்தினால் புள்ளி பட்டியலில் சிஎஸ்கே இரண்டாவது இடத்திற்கும், ராஜஸ்தான் ராயல்ஸ் மூன்றாவது இடத்திற்கும் செல்லும்.

இந்த நிலையில் இந்த போட்டி குறித்து கருத்து தெரிவித்துள்ள கேப்டன் சஞ்சு சாம்சன், இன்றைய ஆடுகளும் கொஞ்சம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் இது நிச்சயமாக 140 ரன்கள் எடுக்கும் விக்கெட்கள் கிடையாது. நாங்கள் கொஞ்சம் முயற்சி செய்து 160 ரன்கள் அடித்திருக்க வேண்டும். நாங்கள் பேட்டிங்கில் தான் தவறு செய்து விட்டோம்.

அங்கே தான் நாங்கள் தோற்று விட்டோம் என்று நினைக்கின்றேன். இன்றைய ஆட்டத்தில் கூடுதலாக ஒரு பந்துவீச்சாளர் இருந்திருந்தால் கொஞ்சம் நெருக்கடி கொடுத்திருக்கலாம். வெறும் ஐந்து பவுலர்களை வைத்து போட்டியை நகர்த்துவது என்பது சவலான காரியம் கிடையாது. ஆனால் இந்த ஐந்து பவுலர்களை பயன்படுத்தி எனக்கு பழகிவிட்டது.

இந்த ஐந்து பவுலர்களுமே தரமான வீரர்கள். உண்மையை சொல்ல வேண்டும் என்றால் அனைவரும் அமர்ந்து தற்போது நாம் தோல்விகளை தொடர்ந்து சந்தித்து வருகிறோம் என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். மேலும் நாம் ஒரு அணியாக என்ன தவறு செய்கிறோம் என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும்.

இந்த தொடரில் தற்போது முக்கியமான கட்டத்தில் நாம் இருக்கின்றோம். இந்த சமயத்தில் ஏதேனும் ஒரு வீரர் தன்னுடைய பொறுப்பை உணர்ந்து என் அணிக்காக நான் வெற்றியை தேடி தருவேன் என்ற உணர்வில் விளையாட வேண்டும். இதை செய்யக்கூடிய வீரர்கள் எங்களிடம் இருக்கிறார்கள்.

ஆனால் அனைவருமே சேர்ந்து செய்தால்தான், நம்மால் வெற்றி பெற முடியும். ஏனென்றால் இது தனிப்பட்ட வீரர்கள் விளையாடும் போட்டி கிடையாது. ஒரு அணியாக சேர்ந்து விளையாடும் ஆட்டம். எனினும் இது போன்ற நெருக்கடியான கட்டத்தில் தனிப்பட்ட ஒரு வீரர் அனைவருக்காகவும் எழுந்து போராட வேண்டும் என்று சாம்சன் கூறியுள்ளார்.

Story first published: Wednesday, May 15, 2024, 23:41 [IST]
Other articles published on May 15, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+