சென்னை : ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கே எதிரான 61-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முக்கிய மாற்றம் ஒன்றை செய்திருக்கிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்திருக்கிறது.
இதை அடுத்து இன்றைய ஆட்டத்தில் பந்து வீசும் சிஎஸ்கே அணி பிளேயிங் லெவனில் அதிரடி மாற்றத்தை கொண்டு வந்திருக்கிறது. குறிப்பாக சிஎஸ்கே அணியில் வீக்னசாக அனுபவ வீரர் ரஹானே இருந்து வந்தார்.

தொடர்ந்து மோசமாக செயல்பட்டு வருவதால், அவரை நீக்கிவிட்டு ஏதேனும் ஒரு நல்ல வீரருக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று ரசிகர்கள் வலியுறுத்தி வந்தனர். ஆனால் சிஎஸ்கே அணி இந்த பேச்சை சுத்தமாக கேட்கவே இல்லை. காரணம் தோனி, ரஹானே மீது அதிக நம்பிக்கை வைத்திருந்ததால் அவருக்கு தொடர்ந்து வாய்ப்பு வழங்கினார்.
கடந்த குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கூட ரஹானேவின் பெயர் முதலில் இல்லை. அதன் பிறகு இம்பாக்ட் வீரராக ரஹானேவை ஓப்பனிங் பேட்ஸ்மனாக களம் இறக்கியது. இதன் காரணமாக ருதுராஜ் மூன்றாவது பேட்ஸ்மேனாக களமிறங்கினார். அனைத்து சர்ச்சையும் மீறி ரஹானேவிற்கு வாய்ப்பு வழங்கப்பட்ட போதிலும் அவர் ஐந்து பந்துகளை எதிர்கொண்டு 1 ரன் மட்டுமே எடுத்தார்.
மேலும் ருதுராஜ் டக் அவுட் ஆனார். இதனால் கடுப்பான ருதுராஜ், ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ரஹானேவை சேர்க்கப் போவதில்லை என முடிவெடுத்தார். இது குறித்து பேசுகையில், இன்றைய ஆட்டத்தில் தொடக்க வீரராக தாமும் ரச்சின் ரவீந்திராவும் தான் களமிறங்க போகிறோம் என திட்டவட்டமாக கூறினார். இதேபோன்று மூன்றாவது வீரராக டேரல் மிட்செல் களமிறங்குவார் என்றும் திட்டவட்டமாக கூறினார்.
இதேபோன்று மிட்செல் சாண்ட்னருக்கு பதிலாக தீக்சனாவையும் ருதுராஜ் சேர்த்து இருக்கிறார். இதன் மூலம் இன்றைய ஆட்டத்தில் தோனியின் பேச்சு எடுபடவில்லை என தெரிகிறது. தோனி எப்போதுமே ரஹானேவை மாற்ற ஒப்புக் கொள்ளாத நிலையில், ருதுராஜ் தன்னிச்சையாக இந்த முடிவை எடுத்திருக்கிறார் என்று செய்திகள் வெளியாகிறது. ருதுராஜின் இந்த தைரியமான முடிவு கை கொடுக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.