சென்னை : ஐபிஎல் தொடரின் கடைசி லீக் ஆட்டமான 70 வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்த தயாராக இருந்தது. ஆனால் கவுகாத்தியில் கடும் மழை பெய்ததால்,டாஸ் கூட வீச முடியாத நிலையில் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது.
இதன் மூலம் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி பிரித்து வழங்கப்பட்டது. இது சஞ்சு சாம்சனுக்கு பேரிடியாக அமைந்திருக்கிறது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 13 போட்டியில் விளையாடிய நிலையில் 16 புள்ளிகளுடன் இருந்தது.

சன்ரைசர்ஸ் அணி 14 போட்டிகள் விளையாடி 17 புள்ளியுடன் இரண்டாம் இடத்தில் இருந்தது. இந்த நிலையில் இன்றைய ஆட்டத்தில் கொல்கத்தா அணியும்,ராஜஸ்தான் அணியும் மோதி இருந்தது. இந்த போட்டியில் மட்டும் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றிருந்தால் 19 புள்ளிகள் பெற்று பிளே ஆப் சுற்றில் முதல் இரண்டு இடத்தை பிடித்திருக்கும். இதன் மூலம் குவாலிஃபயர் 1 போட்டியில் விளையாடி இருந்திருக்கலாம்.
ஆனால் இன்றைய ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டதால், ராஜஸ்தான் அணிக்கு ஒரு புள்ளிகள் தான் வழங்கப்பட்டது. இதன் மூலம் சன்ரைசர்ஸ் அணியும், ராஜஸ்தான் அணியும் 17 புள்ளிகள் பெற்று சமமாக இருந்த நிலையில், ரன் ரேட் அடிப்படையில் சன்ரைசர்ஸ் அணி இரண்டாவது இடத்திற்கும், ராஜஸ்தான் மூன்றாவது இடத்திற்கும் சென்றது. இந்த நிலையில் வரும் செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ள முதல் குவாலிபயர் போட்டியில் முன்னாள் சாம்பியன்களான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் அகமதாபாத்தில் பலப் பரிட்சை நடத்துகிறது.
இதன் அடுத்து மே 22 ஆம் தேதி அகமதாபாத் நகரில் நடைபெறும் எலிமினேட்டர் ஆட்டத்தில், தற்போது ஆர் சி பி அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் பலப்பரிட்சை நடத்துகிறது. எலிமினேட்டர் ஆட்டத்தில் லீக் சுற்றில் முதல் ஏழு போட்டிகளில் ஆறு போட்டி வெற்றி பெற்ற அணியும், முதல் ஏழு போட்டியில் ஆறு போட்டிகள் தோல்வி அடைந்த அணியும் பல பரீட்சை நடத்துகின்றன.குவாலிஃபையர் 2 போட்டி வெள்ளிக்கிழமையும், இறுதிப்போட்டி ஞாயிற்றுக்கிழமையும் சென்னையில் நடைபெறுகிறது குறிப்பிடத்தக்கது.