Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இனி 50,60 ரன்கள் போதாது, சதம் அடிக்க வேண்டும்.. அதிக சிக்சர் அடிக்கும் அணியே வெல்லும் - KL Rahul

லக்னோ : ஐபிஎல் தொடரில் இனி எந்த அணி அதிக சிக்ஸர்கள் அடிக்கிறார்களோ அவர்களே வெற்றி பெறுவார்கள் என்று லக்னோ அணியின் கேப்டன் கே எல் ராகுல் தெரிவித்துள்ளார். ஐபிஎல் தொடரில் 44-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொண்ட லக்னோ அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 196 ரன்கள் அடித்த நிலையில் ராஜஸ்தான் அணி மூன்று விக்கெட்டுகளை மட்டுமே 19ஆவது ஓவர்களில் அந்த இலக்கை வெற்றிகரமாக எட்டியது. இதன் மூலம் ராஜஸ்தான் அணி பதினாறு புள்ளிகள் பெற்று முதல் இடத்திலும் லக்னோ அணி 10 புள்ளிகள் பெற்று நான்காவது இடத்திலும் உள்ளது.

IPL 2024 RR vs LSG - Captain KL Rahul says Team hitting most sixers will win

இந்த நிலையில் தோல்வி குறித்து பேசிய கே எல் ராகுல் தாங்கள் 20 ரன்கள் குறைவாக அடித்துவிட்டோம் என்று கூறினார். இது குறித்து பேசிய அவர் நாங்கள் பேட்டிங் செய்யும்போது நல்ல தொடக்கத்தை பெறவில்லை. எனினும் நானும் தீபக் ஹூடா நல்ல பார்ட்னர்ஷிப்பை அமைத்து இருந்தோம். இன்னும் முக்கியமான கட்டத்தில் செட் ஆகியிருந்த பேட்ஸ்மேன்கள் ஆட்டம் இழந்து விட்டனர்.

இனி 50, 60 ரன்கள் எடுக்கும் பேட்ஸ்மேன்கள் சதம் அடித்தால் மட்டுமே வெற்றி பெற முடியும். ராஜஸ்தான் வீரர்கள் கடைசி இரண்டு ஓவர்களில் நன்றாகவே பந்து வீசினார்கள். நாங்கள் நல்ல நிலையில் இருந்தோம். நிச்சயம் அதனை பயன்படுத்திக் கொண்டு இருபது ரன்கள் கூடுதலாக அடித்திருக்க வேண்டும். ஐபிஎல் தொடரில் வெற்றி பெற வேண்டும் என்றால் எந்த அணி அதிக சிக்ஸர்கள் அடிக்கிறார்களோ அவர்களே ஒவ்வொரு போட்டியிலும் வெல்வார்கள்.

எங்கள் அணியில் ஸ்டோனிஸ் மற்றும் நிக்கோலஸ் பூரான் ஆகியோர்தான் பெரிய ஷார்ட் ஆடுவார்கள். சிக்சர்கள் அடிக்க நாங்கள் அவர்களை நம்பி இருந்தோம். என்னைப் போன்ற வீரர்கள் எல்லாம் கேப்பை பார்த்து ரன் அடித்து விளையாடினோம். இன்று ஆட்டத்தில் பவுண்டரிகள் மற்றும் ஓடோடி ரன்களை எடுத்தாலே போதும் என்று நினைத்தேன்.

ரவி பிஷ்னாயை ஆட்டத்தின் கடைசி கட்டத்தில் பயன்படுத்தலாம் என்று நினைத்தேன். அவர்கள் தொடர்ந்து எங்களுக்கு நெருக்கடி கொடுத்ததால் ரவி பிஷ்னாயை பயன்படுத்துவதற்கான சரியான நேரம் கிடைக்கவில்லை. நான் கொண்டு வரும்போது ஆட்டம் எங்கள் கையை நழுவி சென்று விட்டது. ரோமன் போவெல் மற்றும் ஹெட்மயர் பேட்டிங் செய்யும்போது ரவி பிஷ்னாயை பயன்படுத்த நினைத்திருந்தேன் என்று ராகுல் விளக்கம் அளித்தார்.

Story first published: Saturday, April 27, 2024, 23:55 [IST]
Other articles published on Apr 27, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+