Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

"ஒரிஜினல் தல டிகே தான்" தோனியை சீண்டிய ஆர்சிபி ரசிகர்கள்.. ஆப்பு வைத்த ராஜஸ்தான் ராயல்ஸ்

அகமதாபாத் : ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ரசிகர்கள் தினேஷ் கார்த்திக்கை வைத்து தோனியையும். சிஎஸ்கே ரசிகர்களையும் கிண்டல் செய்து வந்தனர். இந்த நிலையில் எலிமினேட்டர் போட்டியில் அதற்கு பழி தீர்த்து இருக்கிறார்கள் சிஎஸ்கே ரசிகர்கள்.

2024 ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றிம் எலிமினேட்டர் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் தோல்வியடைந்து தொடரில் இருந்து வெளியேறி இருக்கிறது. இந்தப் போட்டியில் தினேஷ் கார்த்திக் 13 பந்துகளில் 11 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார்.

IPL 2024 RR vs RCB CSK fans questions Dinesh Karthik performance in the eliminator match

அதனால் கடைசி ஓவர்களில் பெரிதாக ரன் குவிக்க முடியாமல் திணறிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் மட்டுமே எடுத்தது. அடுத்து ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 19 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வீழ்த்தியது.

இதை அடுத்து கடந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்திய பின், "தினேஷ் கார்த்திக் தான் உண்மையான தல" என பெங்களூரு அணி ரசிகர்கள் சிஎஸ்கே-வை கிண்டல் செய்து வந்தனர். இதன் மூலம் மறைமுகமாக தோனியையும் கிண்டல் செய்தனர். இந்த நிலையில் தினேஷ் கார்த்திக் மோசமாக ஆடியதை அடுத்து சிஎஸ்கே ரசிகர்கள். "இவர்தான் உண்மையான தலையா" எனக் கேட்டு அவர்களை திருப்பி கிண்டல் செய்து வருகின்றனர்.

லீக் சுற்றில் கடைசி போட்டியில் பெங்களூரு அணியிடம் தோல்வி அடைந்து சிஎஸ்கே அணி தொடரில் இருந்தே வெளியேறி இருந்தது. அப்போது பெங்களூரு அணி வீரர்களும், ரசிகர்களும் ஐபிஎல் கோப்பை வென்றதைப் போல தலை, கால் புரியாமல் கொண்டாடினர். பிளே ஆக் முன்னேற வாய்ப்பே இல்லாத பெங்களூரு அணி, பிளே ஆஃப் முன்னேறியதால் அப்படி கொண்டாடினார்கள் என்றாலும் கூட, அவர்கள் ஐபிஎல் கோப்பை வென்றதைப் போல கொண்டாடியதோடு, சிஎஸ்கே ரசிகர்களை மோசமாக சீண்டினர். அதன் விளைவாகவே இப்போது சிஎஸ்கே ரசிகர்கள் அதற்கு பழி தீர்க்கும் வகையில் கிண்டல் செய்து வருகின்றனர்.

Story first published: Thursday, May 23, 2024, 8:30 [IST]
Other articles published on May 23, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+