Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல் 2024 அட்டவணை - மும்பை இந்தியன்ஸ், ஆர்சிபி அணிகள் விளையாடும் போட்டிகள் விவரம்

IPL 2024 Schedule : ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு தொடருக்கான அட்டவணை தற்போது பிசிசிஐயால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுவதால் தற்போது 21 போட்டிகளுக்கான அட்டவணை தான் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில் ஐபிஎல் தொடரில் ஐந்து முறை சாம்பியன் பட்டத்தைப் பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி மீதுதான் தற்போது அனைவரின் கவனமும் திரும்பியிருக்கிறது. ஏனென்றால் ஐபிஎல் ஆரம்பிப்பதற்கு முன்பே கேப்டன்சி விவகாரம், அணி வீரர்களுக்கு இடையே விரிசல் என பல பிரச்சனைகளை அந்த அணி சந்தித்து இருக்கிறது.

IPL 2024 schedule - Mumbai indians and RCB Full match details is here

இந்த நிலையில் தன்னுடைய முதல் போட்டியை மும்பை இந்தியன்ஸ் அணி வரும் மார்ச் 24ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை விளையாடுகிறது. குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக அகமதாபாத்தில் இந்த போட்டி நடைபெறுகிறது. குஜராத் டைட்டன்ஸ் அணியில் இருந்து தான் ஹர்திக் பாண்டியா மும்பைக்கு வந்திருந்தார்.

இந்த நிலையில் தன்னுடைய முன்னாள் அணிக்கு எதிராகவே முதல் போட்டியை ஹர்திக் பாண்டியா விளையாட உள்ளார். இந்த நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி தங்களுடைய இரண்டாவது போட்டியை மார்ச் 27ஆம் தேதி சன்ரைசர்ஸ் அணியுடன் ஹைதராபாத்தில் விளையாடுகிறது. இதேபோன்று ஏப்ரல் ஒன்றாம் தேதி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் தங்களது சொந்த மண்ணில் மும்பை அணி மோதுகிறது.

இதேபோன்று ஏப்ரல் ஏழாம் தேதி டெல்லி அணியுடன் மும்பை அணி வான்கடே மைதானத்தில் விளையாடுகிறது. இந்த நிலையில் அதிக ரசிகர்களை கொண்ட ஆர் சி பி அணி விளையாடும் போட்டி விவரங்களை தற்போது பார்க்கலாம். ஆர்சிபி அணி தங்களுடைய முதல் போட்டியை வரும் 22ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே உடன் மோதுகிறது.

மார்ச் 25ஆம் தேதி தங்களுடைய இரண்டாவது போட்டியில் பஞ்சாப் அணியை எதிர்கொள்ளும் ஆர் சி பி, மார்ச் 29ஆம் தேதி கொல்கத்தா அணியுடன் மோதுகிறது. ஏப்ரல் 2-ஆம் தேதி லக்னோ அணியுடன் விளையாடும் ஆர் சி பி. ஏப்ரல் ஆறாம் தேதி ராஜஸ்தான் ராயல்சை எதிர் கொள்கிறது. ஆர் சி பி அணி தாங்கள் விளையாடும் முதல் ஐந்து போட்டிகளில் மூன்று போட்டியை சொந்த மண்ணான பெங்களூரில் விளையாடுகிறது.

Story first published: Thursday, February 22, 2024, 18:09 [IST]
Other articles published on Feb 22, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+