Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2024 Schedule - ஆர்சிபி அணி விளையாடும் போட்டிகள்.. சிஎஸ்கே உடன் 2வது போட்டி எப்போது?

மும்பை :ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு சீசனுக்கான மொத்த அட்டவணையை தற்போது பிசிசிஐ அறிவித்திருக்கிறது. தேர்தல் காரணமாக முதல் 21 போட்டிகளுக்கான அட்டவணை மட்டும் வெளியிடப்பட்ட நிலையில் தற்போது முழு பட்டியல் வெளியாகி இருக்கிறது.

இந்த சீசனில் முதல் போட்டியில் ஆர்சிபி அணியும் சிஎஸ்கே அணியும் பல பரிட்சை நடத்தியது. முதலில் இரண்டாவது போட்டி மார்ச் 25ஆம் தேதி ஆன திங்கட்கிழமை பஞ்சாப்புடன் ஆர்சிபி அணி பெங்களூரில் மோதுகிறது.

IPL 2024 schedule - RCB Matches full schedule and home and away list

இதேபோன்று மார்ச் 29ஆம் தேதி தங்களுடைய மூன்றாவது போட்டியில் கொல்கத்தாவை பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் ஆர்சிபி எதிர்கொள்கிறது. ஏப்ரல் இரண்டாம் தேதி லக்னோ அணியை தங்களது சொந்த மண்ணில் ஆர்சிபி சந்திக்கிறது. இதேபோன்று ஏப்ரல் ஆறாம் தேதி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை ஜெய்ப்பூரில் ஆர்சிபி மோதுகிறது.

இதனைத் தொடர்ந்து ஏப்ரல் 11ஆம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை ஆர்சிபி எதிர்கொள்கிறது. ஏப்ரல் 15 ஆம் தேதி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ஆர்சிபி மோதுகிறது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் ஏப்ரல் 21ஆம் தேதி கே கே ஆர் அணியை எதிர்கொள்ளும் ஆர்சிபி, ஏப்ரல் 25ஆம் தேதி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை அவர்களது சொந்த மண்ணிற்கு சென்று எதிர்கொள்கிறது.

ஏப்ரல் 28ஆம் தேதி அகமதாபாத் மைதானத்தில் குஜராத் அணியை எதிர்கொள்ளும் ஆர்சிபி மே நான்காம் தேதி மீண்டும் குஜராத் அணியை தங்களது சொந்த மண்ணில் எதிர்கொள்கிறது. டெல்லி அணியை மே 12ஆம் தேதி பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் எதிர்கொள்ளும் ஆர்சிபி, மே 18ஆம் தேதி சிஎஸ்கே அணியை பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் எதிர்கொள்ள உள்ளது. குஜராத், சிஎஸ்கே அணியை இரண்டு முறை எதிர்கொள்ளும் ஆர்சிபி அணி, மும்பை இந்தியன்ஸ் அணியை ஒருமுறை மட்டும் எதிர்கொள்கிறது.

Story first published: Monday, March 25, 2024, 18:23 [IST]
Other articles published on Mar 25, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+