சென்னை : இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி நடைபெற்றது. அதில் இந்தியா தோல்வியை தழுவிய நிலையில் ரசிகர்கள் சோகமாக இருந்தனர். ஆனால் திடீரென்று சிஎஸ்கே தொடர்பான மீம்ஸ்கள் சமூக வலைத்தளத்தில் எங்கு பார்த்தாலும் இருந்தது.
என்னடா திடீரென்று சிஎஸ்கே மீம்ஸ்கள் வருகிறது என்று பார்த்தால், அப்போது தான் தெரிந்தது தமிழகத்தில் முக்கிய கட்சியான நாம் தமிழர் கட்சியை சேர்ந்த தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சி எஸ் கே தொடர்பாக ஒரு கூட்டத்தில் பேசியது தான் இதற்கு காரணம் என்று.

சீமான் எப்போதுமே உணர்ச்சிகரமாக பேசக் கூடியவர். எப்போதுமே சிஎஸ்கே அணிக்கும் நாம் தமிழர் கட்சியினருக்கும் பல கருத்து வேறுபாடு இருந்து வருகிறது. காவிரி போராட்டத்தில் ஒரு பகுதியாக ஐபிஎல் போட்டிகளை சென்னையில் நடத்தக்கூடாது என்று நாம் தமிழர் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது போன்று சிஎஸ்கே அணியில் தமிழர்களே இல்லை என்ற நிலை கடந்த இரண்டு சீசன்களாக இருக்கிறது.
மேலும் பிளேயிங் லெவனில் தமிழக வீரர்களுக்கு இடம் அளிப்பதில்லை என்றும் குற்றச்சாட்டு இருந்து வந்தது. இதனால் பலமுறை சிஎஸ்கே அணி எதிராக நாம் தமிழர் கட்சியினர் சமூக வலைத்தளத்தில் டிரெண்ட் செய்து இருக்கிறார்கள். இந்த நிலையில் தான் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் சிஎஸ்கே அணியில் இருக்கும் 11 வீரர்களும் தமிழர்களாக இருப்பார்கள்.

நானும் சிஎஸ்கே அணியின் இருப்பேன் என்று சீமான் பேசியிருந்தார். சமூக வலைத்தளத்தில் எந்த கண்டெண்டும் இல்லை என காத்திருந்த மீம் க்ரேடர்ஸர்களுக்கு திருவிழா போல் அமைந்தது சீமானின் இந்த பேச்சு. உடனடியாக சீமானை வைத்து பல மீம்ஸ்களை போடத் தொடங்கி விட்டார்கள்.
குறிப்பாக சீமான் சிஎஸ்கே அணியின் கேப்டனாக இருந்து விளையாடினால் எப்படி இருக்கும் என்று மீம்ஸ் போட்டு தாக்கி விட்டார்கள்.
அதில் சீமான் தலையில் சிவப்பு நிற பேண்டை அணிந்து கொண்டு பேட்டை வைத்து கோபமாக இருப்பது போல் மீம்ஸ்களை போட்டு வருகிறார்கள். இதனை அடுத்து சிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரர்கள் என்றால் அது தோனியும் ரெய்னாவும் தான். இந்த மீம்சில் சிஎஸ்கே அணியில் சீமானும் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சாட்டை துரைமுருகனும் ஒன்றாக நின்று பேட்டிங் செய்வது போல் மீம்ஸ் போட்டு கலக்கி வருகிறார்கள் மீம் கிரியேட்டர்கள்.

இதேபோன்று ஐபிஎல் ஏலத்தில் சிஎஸ்கே அணி நிர்வாகிகள் உட்காரும் இடத்தில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் அமர்ந்து ஏலத்தில் தமிழக வீரர்கள் எடுக்க காத்திருப்பது போல் மீம்ஸ்களை போட்டு வருகிறார்கள். அதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி என்பது ஆங்கிலத்தில் இருப்பதால் சென்னை அருமை ராஜாக்கள் என அணியின் பெயரை தமிழில் மாற்றி இருப்பது போல் மீம்ஸ் போட்டு இருக்கிறார்கள்.