Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆர்சிபியிலிருந்து வெளியேறிய உடன் சதம் அடித்த இந்திய வீரர்..நல்ல காலம் வந்திருச்சி- ரசிகர்கள் கிண்டல்

மும்பை : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பல திறமையான வீரர்கள் இடம் பெற்று இதுவரை ஒரு முறை கூட ஆர்சிபி அணி சாம்பியன் பட்டத்தை வென்றதில்லை. இதனால் ரசிகர்கள் பலரும் ஆர் சி பி அணியை அதிர்ஷ்டம் இல்லாத அணி என்றுதான் கூறுவார்கள்.

மேலும் ஒரு வீரர் அதிரடியாக விளையாடிக் கொண்டு இருந்தால் அவர் ஆர்சிபி அணிக்கு வந்துவிட்டால் அந்த வீரரின் கிரிக்கெட் வாழ்க்கையை தலைகீழ் மாறிவிடும் என்றும் சிலர் கிண்டல் அடிப்பார்கள்.

IPL 2024 - Shabaz Ahmed hits century after RCB traded him in to SRH

மேலும் ஒரு வீரர் சிறப்பாக விளையாட வேண்டும் என்றால் அவருக்கு நல்ல காலம் இருக்க வேண்டும் என்றால் ஆர் சி பி அணியை விட்டு உடனே வெளியேறிவிட வேண்டும் என்றும் ரசிகர்கள் கிண்டல் அடிப்பார்கள். ஆர்சிபி அணியில் இருப்பதால்தான் விராட் கோலி கேப்டனாக இருந்தபோது ஒரு முறை கூட ஐசிசி கோப்பையை வென்றதில்லை என்று ரசிகர்கள் வெளிப்படையாகவே பேசி வருவார்கள்.

இதற்கு விதிவிலக்காக கிறிஸ் கெயில் மற்றும் டிவில்லியர்ஸ் ஆகியோர் மட்டும்தான் ஆர்சிபி அணிக்கு வந்தவுடன் நன்றாக விளையாட தொடங்கினர். மற்ற வீரர்கள் எல்லாம் ஆர் சி பி க்கு வந்தவுடன் தடுமாறு தொடங்கி விடுவார்கள். இந்த நிலையில் ஆர் சி பி அணிக்காக நான்கு சீசன்கள் விளையாடிய இந்திய வீரர் சபாஷ் அகமதை ஏலத்திற்கு முன்பு ஆர்சிபி அணி ஹைதராபாத்துக்கு ட்ரான்ஸ்ஃபர் செய்தது.

இந்த நிலையில் விஜய் ஹசாரே கோப்பை தொடரின் காலிறுதி ஆட்டம் இன்று நடைபெற்றது. இதில் பெங்கால் அணியும் ஹரியானா அணியும் பல பரிட்சை நடத்தியது. இதில் 93 ரன்கள் சேர்ப்பதற்குள் ஐந்து விக்கெட்டுகளை இழந்து பெங்கால் அணி தடுமாறியது. அப்போது களத்திற்கு வந்த சபாஷ் அஹமத் அபாரமாக விளையாடி ரன்களை சேர்த்தார்.

118 பந்துகளை எதிர்கொண்ட அவர் 100 ரன்களை கடந்தார். இதில் நான்கு பவுண்டரிகளும் நான்கு சிக்ஸர்களும் அடங்கும். இதன் மூலம் பெங்கால் அணி 225 ரன்கள் எடுத்து நல்ல இலக்கை எட்டியது. எனினும் ஹரியானா அணி 45 புள்ளி ஒரு ஓவரில் இந்த இலக்கை எட்டி வெற்றி பெற்றது. இந்த நிலையில் ஷாபாஷ் அஹமத் ஆர்சிபி அணியை விட்டு சென்றவுடன் சதம் அடித்ததை வைத்து அவர் ஆர் சி பி யிலிருந்து விலகியதால் தான் அவருடைய கிரிக்கெட் வாழ்க்கை திரும்ப மேலோங்க போகிறது என்று ரசிகர்கள் கிண்டல் அடித்து வருகிறார்கள்.

Story first published: Monday, December 11, 2023, 20:24 [IST]
Other articles published on Dec 11, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+