Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தொடர்ந்து இரண்டு டக் அவுட்.. சிவம் துபேக்கு நெருக்கடி! பந்தயத்தில் முந்தும் ஹர்திக்?

மும்பை : ஐபிஎல் தொடர் மூலம் வாய்ப்பே இல்லாமல் தவித்த பல வீரர்கள் பீனிக்ஸ் பறவை போல் சாம்பலில் இருந்து மீண்டும் பிறந்து வந்திருக்கிறார்கள். அந்தப் பட்டியலில் தற்போது சிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரர் சிவம் துபே இணைந்து இருக்கிறார்.

சிவம் துபேவின் அதிரடி ஆட்டத்தால் கடந்த 2023 ஆம் ஆண்டு சீசனில் சி எஸ் கே சாம்பியன் பட்டத்தை வென்றது. நடப்பு சீசனிலும் சிஎஸ்கே அதிரடியாக விளையாடி ரன்களை சேர்க்கிறது, என்றால் அதற்கு சிவம் துபேவும் ஒரு காரணம். 11 போட்டிகளில் விளையாடுகின்ற சிவம் துபே 350 ரன்கள் அடித்திருக்கிறார்.

IPL 2024 - Shivam dube slump in Form gives advatage to Hardik Pandya in t20 world cup

இதில் அதிகபட்சமாக 66 ரன்கள் சேர்த்திருக்கிறார். சராசரி 43.75 என்ற அளவில் இருக்கிறது. ஸ்டிரைக் ரேட் யாருமே தொட முடியாத 170 என்ற அளவில் உச்சத்தில் இருக்கிறது. சிக்ஸர் மன்னனாக சிவம் துபே திகழ்ந்து வருவதால் அவருக்கு டி20 உலக கோப்பை இந்திய அணியில் இடம் கிடைத்திருக்கிறது. இந்த நிலையில் சிவம் துபே பெரிய அளவில் ஐபிஎல் போட்டியில் பந்து வீசவில்லை.

இந்த சூழலில் போதிய அளவில் இந்த தொடரில் தாக்கத்தை ஏற்படுத்தாமல் இருந்த ஹர்திக் பாண்டியா, கடைசி மூன்று போட்டிகளில் பந்து வீச்சில் அபாரமாக செயல்பட்டு இருக்கிறார். கடைசியாக விளையாடிய மூன்று போட்டிகளில் அவர் ஏழு விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். மேலும் ஹர்திக் பாண்டியா பேட்டிங்கில் தன்னுடைய திறமையை ஏற்கனவே நிரூபித்திருக்கிறார்.

இதனால் டி20 உலக கோப்பையில் ஆல்ரவுண்டராக சிவம் துபே இடம் பெறுவாரா? ஹர்திக் பாண்டியா இடம் பெறுவாரா என்ற கேள்வி எழுந்திருக்கிறது. இந்த நிலையில் விராட் கோலி தொடக்க வீரராக களம் இறங்கினால், சிவம் துபேக்கும் நடுவரிசையில் வாய்ப்பு கிடைக்கும். இந்த சூழலில் சிவம் துபே கடைசியாக பஞ்சாப் அணிக்கு எதிராக விளையாடி இரண்டு போட்டிகளிலும் டக் அவுட் ஆகி இருக்கிறார்.

இது சிவம் துபேவின் வாய்ப்புகள் பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது. இதனால் எஞ்சி இருக்கும் போட்டியில் சிவம் துபே தன்னுடைய பேட்டிங்கில் அதிரடி காட்டி ரன்களை சேர்த்தார். டி20 உலக கோப்பை இந்திய அணியில் இடம் இல்லை என்றால் ஹர்திக் பாண்டியா அந்த இடத்திற்கு வந்து விடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Wednesday, May 8, 2024, 21:37 [IST]
Other articles published on May 8, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+