For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இவரை அணியில் சேர்த்தால், டி20 உலககோப்பையை இந்தியா மறந்துவிட வேண்டியது தான்!

மும்பை : டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி இன்னும் ஒரு சில நாட்களில் அறிவிக்கப்பட உள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரில் யார் சிறப்பாக செயல்படுகிறார்களோ அவர்களை டி20 அணியில் தேர்வு செய்ய பிசிசிஐ யோசித்து வருகிறது.

இந்த நிலையில் ரோகித் சர்மாவுக்கு தொடக்க வீரராக ஜெய்ஸ்வால் இடம்பெறுவார் என்று தகவல் வெளியாகி உள்ளது. எனினும் இந்திய அணியில் நட்சத்திர வீரரான சுப்மன் கில்லை விட்டுவிடக்கூடாது என்றும் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

IPL 2024- Shubman gill strike rate in Powerplay is worst among openers

ஜெய்ஸ்வாலை விட கில் சீனியர் என்பதால் கில்லுக்கு தான் முன்னுரிமை கொடுக்கப்படும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. ஆனால் சுப்மன் கில்லை டி20 உலக கோப்பையில் தொடக்க வீரராக சேர்த்தால் இந்திய அணி வெற்றி பெறும் வாய்ப்பு குறைவாக இருக்கும் என்று கிரிக்கெட் வல்லுனர்கள் எச்சரிக்கை விடுத்து இருக்கிறார்கள். உதாரணத்திற்கு இந்திய அணியில் இருக்கும் மிகப்பெரிய பிரச்சனையே தொடக்க வீரர்கள் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்க்காமல் இருப்பதுதான்.

கேஎல் ராகுல், ரோகித் சர்மா என பலர் இந்த பொறுப்பில் இருந்தும். இந்தியாவுக்கு இந்த பிரச்சனை தீர்ந்த பாடு இல்லை. இந்த தருணத்தில் அந்த சிக்கலை தீர்ப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரும் சமீப காலமாக தடுமாறி வருகிறார். உதாரணத்திற்கு நடப்பு ஐபிஎல் தொடரில் 10 அணிகளை சேர்ந்த 11 தொடக்க வீரர்கள் 100 பந்துகளுக்கு மேல் பவர் பிளேவில் எதிர்கொண்டு இருக்கிறார்கள்.

இதில் பத்து வீரர்கள் பவர் பிளேவில் தங்களுடைய ஸ்ட்ரைக் ரெட்டை 140 க்கு மேல் வைத்திருக்கிறார்கள். ஆனால் ஒருவர் மட்டும் மிக குறைவான வேகத்தில் ரன்களை சேர்த்து வருகிறார். அது கில் தான் ஐபிஎல் தொடரில் 127 தான் ஸ்ட்ரைக் ரேட் ஆக வைத்திருக்கிறார். இதன் இதனால் சுப்மன் கில்லை இந்திய டி20 உலக கோப்பை அணியின் சேர்த்தால் அது நிச்சயம் பாதகமாக தான் அமையும் என்று பலரும் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள்.

கில் திறமை வாய்ந்த வீரராக இருந்தாலும் அதிரடியாக விளையாடக்கூடிய வீரர்கள் தான் தொடக்க வீரராக இருக்க வேண்டும் என்று சுட்டிக்காட்டி உள்ள கிரிக்கெட் வல்லுநர்கள், ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் போன்ற வீரர்கள் அணியில் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

Story first published: Sunday, April 28, 2024, 19:09 [IST]
Other articles published on Apr 28, 2024
English summary
IPL 2024- Shubman gill strike rate in Powerplay is worst among openers இவரை அணியில் சேர்த்தால், டி20 உலககோப்பையை இந்தியா மறந்துவிட வேண்டியது தான்!
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+