இது 2012 ஐபிஎல் ஸ்கிரிப்டா? கேகேஆர் தான் சாம்பியன் பட்டத்தை வெல்லும்.. இதை கொஞ்சம் பாருங்க
கொல்கத்தா : ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு சீசனில் கொல்கத்தா அணி தற்போது புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது. 11 போட்டிகள் விளையாடியுள்ள கேகேஆர் அணி வெற்றி, மூன்று தோல்வி என 16 புள்ளிகள் உடன் முதலிடத்தில் இருக்கிறார்கள்.
கேகேஆர் அணியின் ரன் ரேட் நேற்றைய ஆட்டத்தில் லக்னோவை 98 ரன்கள் வித்தியாசத்தில் நிறுத்திய பிறகு 1.45 என்ற அளவில் உயர்ந்து இருக்கிறது. இந்த நிலையில் ஐபிஎல் தொடரில் கேகேஆர் அணி தான் சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்று சில ரசிகர்கள் கூறுகின்றனர்.

அதற்கு அவர்கள் நடப்பு ஐபிஎல் தொடர் 2012 ஆம் ஆண்டு நடைபெறுவது போல் தற்போது சீசன் இருப்பதாக கூறியுள்ளனர். ஏனென்றால் 2012 ஆம் ஆண்டு தான் கௌதம் கம்பீர் தலைமையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. அப்போது கே.கே.ஆர் அணி வெற்றி பெற்ற போது என்னென்ன நடந்ததோ அதேபோல் ஒரு சம்பவம் தற்போது நடைபெற்று இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அது என்னவென்று தற்போது பார்க்கலாம்.
2012 ஆம் தொடரில் கே கே ஆர் அணி சாம்பியன் பட்டத்தை வென்ற போது அதற்கு முன்பு நடப்பு சாம்பியனாக சிஎஸ்கே அணி தான் இருந்தது. அதேபோல் தற்போது 2024 ஆம் ஆண்டு சீசனிலும் நடப்பு சாம்பியனாக சிஎஸ்கே அணி தான் களம் இறங்கி இருக்கிறது 2012 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் போது ரோகித் சர்மா சதம் அடித்து இருந்தார். தற்போது 2024 ஆம் ஆண்டு சீசனிலும் ரோகித் சர்மா சதம் அடித்திருக்கிறார்.
இதையெல்லாம் விட மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை கே கே ஆர் அணி 2012 ஆம் ஆண்டு வீழ்த்தியது. அதன் பிறகு தற்போது தான் 12 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை கொல்கத்தா வீழ்த்தி இருக்கிறது. 2012 ஆம் ஆண்டு சீசனின் இறுதிப்போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தான் நடைபெற்றது.
இதில் சிஎஸ்கே அணிக்கு எதிராக களம் இறங்கிய கே கே ஆர் அணி வெற்றி பெற்றது. தற்போது 2024 ஆம் ஆண்டு சீசனிலும் இறுதிப்போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் தான் நடைபெறுகிறது. இதையெல்லாம் சுட்டிக்காட்டி 2012 ஆம் ஆண்டில் கேகேஆர் அணி வென்றது போல் நடப்பு சீசனையும் வெல்ல அதிக வாய்ப்பு இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications