For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

வீடியோ கேம் மாதிரி இருக்கு.. பவுலர்கள் பாவம் இல்லையா? பந்துவீச ரொம்ப கஷ்டமா இருக்கு.. நடராஜன் வேதனை

ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு சீசனில் பந்துவீச மிகவும் கடினமாக இருப்பதாக பிரபல கிரிக்கெட் வீரர் நடராஜன் தெரிவித்துள்ளார். நடப்பு தொடரில் நடராஜன் அபாரமாக செயல்பட்டு பர்பிள் தொப்பியை எல்லாம் கைப்பற்றினார்.

இந்த நிலையில் காயத்தில் இருந்து மீண்டு எப்படி சிறப்பாக செயல்பட்டு விக்கெட்டுகளை எடுத்தேன் என்பது குறித்து நடராஜன் பேட்டி ஒன்று விளக்கம் அளித்துள்ளார். அதில் இந்த தொடரில் தமது செயல்பாடு ரசிகர்களால் கவனிக்கப்பட்டு இருக்கிறது என நினைக்கின்றேன்.

IPL 2024 - SRH Fast Bowlers T Natarajan says its difficult for bowler to perform in ipl

நான் இவ்வளவு நாள் ஹைதராபாத் வந்து சென்றிருக்கிறேன். அப்போது என்னை யாரும் கண்டு கொள்ள மாட்டார்கள். இப்போது நாங்கள் எங்கு சென்றாலும் கூட்டம் கூடி விடுகிறது. ரசிகர்கள் எங்களுக்கு ஆதரவு அளிப்பதற்கு மிகவும் நன்றி நடப்பு டி20 கிரிக்கெட்டில் பேட்ஸ்மேன்களில் ரன்குவிக்கும் திறமை அதிகரித்து இருப்பதாக நான் நினைக்கின்றேன். முன்பெல்லாம் ஏழு பேட்ஸ்மேன்கள் இருப்பார்கள்.

தற்போது ஒன்பதாவது வீரர் வரை பேட்ஸ்மேன் இருக்கிறார். இது போதாது என்று இம்பேக்ட் விதியை வேறு கொண்டு வந்திருக்கிறார்கள். பேட்ஸ்மேன்கள் எல்லாம் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். ஆனால் பௌலர்கள் தான் கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறார்கள். 260 ரன்கள் அடித்தும் அதை ஒரு அணி வெற்றிகரமாக திரட்டுகிறது என்றால் பௌலர்கள் பாவம் இல்லையா?

ஏதோ வீடியோ கேம் பார்ப்பது போல் இருக்கின்றது. இது போன்ற ஆடுகளங்களில் நீங்கள் சிறப்பாக செயல்பட்டால், பந்துவீச்சாளர்களாக உங்களுடைய நம்பிக்கை அதிகரிக்கும். உலகில் நீங்கள் எங்கு வேண்டுமானாலும் வெற்றியை ருசிக்கலாம். பேட் கம்மின்ஸ் தலைமையில் விளையாடுவதை நான் பெருமையாக கருதுகின்றேன். என் மீது நம்பிக்கை வைத்து நெருக்கடியான கட்டத்தில் ஓவர்களில் வீச பாட் கம்மின்ஸ் பொறுப்பு வழங்கினார்.

Story first published: Monday, May 6, 2024, 18:37 [IST]
Other articles published on May 6, 2024
English summary
IPL 2024 - SRH Fast Bowlers T Natarajan says its difficult for bowler to perform in ipl வீடியோ கேம் மாதிரி இருக்கு.. பவுலர்கள் பாவம் இல்லையா? பந்துவீச ரொம்ப கஷ்டமா இருக்கு.. நடராஜன் வேதனை
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+