Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

23 வயது இந்திய வீரருக்கு பந்துவீசவே பயமா இருக்கு.. பந்துவீசவே மாட்டேன்.. பாட் கம்மின்ஸ் பாராட்டு

ஐதராபாத் : ஐபிஎல் தொடரின் 69 ஆவது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் பஞ்சாப் கிங்ஸ் அணியும், ஹைதராபாத் மைதானத்தில் பலப் பரிட்சை நடத்தியது. இதில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி ஐந்து விக்கெட் இழப்பிற்கு 214 ரன்கள் குவித்தது.

இதனை அடுத்து களம் இறங்கிய சன்ரைசர்ஸ் அணியில் அபிஷேக் ஷர்மா, கிளாசன் உள்ளிட்டோர் அதிரடியாக விளையாடி ஆறு விக்கெட் இழப்பிற்கு 215 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றனர். இதன் மூலம் சன்ரைசர்ஸ் அணி 17 புள்ளிகள் பெற்று தற்போது புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு சென்றது.

IPL 2024 SRH vs PBKS - Pat cummins lauds young SRH Players for their amazing skills

இதுகுறித்து போட்டி முடிந்தவுடன் கருத்து தெரிவித்துள்ள சன்ரைசர்ஸ் கேப்டன் பாட் கம்மின்ஸ், முதல் முறையாக தாம் ஐபிஎல் தொடரின் பிளே ஆப் சுற்றில் விளையாட இருப்பதாக தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் சந்தோஷமாக உணர்கின்றேன். ஹைதராபாத் மைதானத்தில் நடைபெற்ற ஏழு போட்டிகளில் நாங்கள் ஆறு ஆட்டங்களில் வெற்றி பெற்றோம்.

இது உண்மையிலேயே சிறந்த விஷயமாக நான் கருதுகின்றேன். இந்த சீசனில் எங்களுடைய அணியில் இருக்கும் வீரர்கள் குறித்து எனக்கு பெரிய பரிச்சயம் இல்லாமல் இருந்தது. ஆனால் நாங்கள் ஒரு அணியாக சிறந்த கிரிக்கெட்டை விளையாடினோம். அதே சமயம் மகிழ்ச்சியாகவும் இருந்தோம். எங்களுடைய அணிகள் திறமையான வீரர்கள் பலர் இருக்கிறார்கள்.குறிப்பாக அபிஷேக் அதிரடியாக விளையாடுகிறார்.

அவருக்கு எதிராக பந்து வீச பயமாக இருக்கிறது. கண்டிப்பாக நான் அவருக்கு எதிராக பந்து வீச மாட்டேன். அபிஷேக் ஷர்மா சுதந்திரமாக விளையாடுகிறார். வேகப்பந்து வீச்சாளர்களுக்கு மட்டுமல்லாமல் சுழற் பந்துவீச்சாளர்களுக்கு எதிராகவும் அதிரடியை காட்டுகிறார். நித்திஷ் உலகத்தரம் வாய்ந்த வீரராக இருக்கின்றார்.

அவருடைய வயதிற்கு மீறிய முதிர்ச்சி நிதிஷிடம் இருக்கின்றது. எங்கள் அணியில் உள்ள பிளஸ் இதுவாக தான் இருக்கும் என்று நினைக்கின்றேன். ரித்திஷ் எங்கள் அணியில் டாப் வரிசையில் விளையாடக்கூடிய திறமை உடைய வீரராக இருக்கின்றார். எங்களுக்கு உண்மையில் திருப்திகரமாகவும் ஆர்வமாகவும் இருக்கின்றது. ஏனென்றால் நான் இதுக்கு முன்பு ஐபிஎல் இறுதிப் போட்டிகளில் விளையாடுவதில்லை. நாங்கள் யாருடன் விளையாட போகிறோம் என்று விரைவில் தெரிந்து விடும். நாங்கள் நன்றாக விளையாடுவதால் அடுத்த போட்டியை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கிறோம்.

Story first published: Monday, May 20, 2024, 6:31 [IST]
Other articles published on May 20, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+