For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

IPL 2024: இனிமேலும் பொறுக்க முடியாது.. விராட் கோலியை விளாசித் தள்ளிய கிரிக்கெட் ஜாம்பவான்

ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் விராட் கோலி அரைசதம் அடித்து இருந்தார். ஆனால், அவரது ஸ்ட்ரைக் ரேட் படுமோசமாக இருந்தது. முதலில் அதிரடி ஆட்டம் ஆடினாலும், அதன் பின் ஆமை வேகத்தில் அவர் ஆடிய ஆட்டத்தை பார்த்து கொந்தளித்து கடுமையாக விமர்சனம் செய்துள்ளார் சுனில் கவாஸ்கர்.

2024 ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான லீக் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் பெங்களூரு அணி
முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணிக்கு ஃபாப் டுபிலேசிஸ் - விராட் கோலி துவக்கம் அளித்தனர்.

IPL 2024 SRH vs RCB Virat Kohli slow innings under scanner

டுபிலேசிஸ் 12 பந்துகளில் 25 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மறுபுறம் விராட் கோலி தனது முதல் 18 பந்துகளில் 32 ரன்கள் குவித்து மிரள வைத்தார். பவர் பிளே ஓவர்களான முதல் 6 ஓவர்களில் பெங்களூரு அணி 1 விக்கெட் இழப்பிற்கு 61 ரன்கள் எடுத்தது. அதன் பின் ரஜத் படிதார் மட்டுமே அதிரடி ஆட்டம் ஆடினார். விராட் கோலி ஆமை வேகத்தில் பேட்டிங் செய்யத் துவங்கினார்.

முதல் 18 பந்துகளில் 32 ரன்கள் குவித்த கோலி, அடுத்த 25 பந்துகளில் 19 ரன்கள் மட்டுமே எடுத்தார். நிறைய டாட் பால் மற்றும் ஒற்றை ரன்களாக எடுத்து சோதித்தார். அதுவரை விராட் கோலியின் மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துக் கொண்டு இருந்த கவாஸ்கர் இந்த முறை கோலி மீதே பொங்கி எழுந்தார்.

கோலியின் நிதான பேட்டிங் குறித்து அவர் பேசுகையில், "கோலியிடம் இருந்து வெறும் சிங்கிள், சிங்கிள் மற்றும் சிங்கிள் மட்டுமே கிடைத்தன. அடுத்து தினேஷ் கார்த்திக், மஹிபால் ஆகிய அதிரடி பேட்ஸ்மேன்கள் பேட்டிங் வரிசையில் இருக்கும் நிலையில் கோலி முயற்சி செய்து சில அபாயமான ஷாட்களை அடித்து இருக்க வேண்டும். ரஜத் படிதாரை பாருங்கள். அவர் ஒரு ஓவரில் ஏற்கனவே மூன்று சிக்ஸர்களை அடித்து விட்டார். ஆனாலும், கடைசி பந்தில் ஒரு ரன் எடுத்து இருக்கலாம் அல்லது வைடாக சென்ற பந்தை அடிக்காமல் விட்டு இருக்கலாம். ஆனால், அங்கு பவுண்டரி அடிக்கும் வாய்ப்பு இருந்ததால் அவர் அதற்கு முயற்சி செய்தார்." என்றார்.

மேலும், "ரஜத் படிதார் ஆடியது போன்ற ஒரு ஆட்டம் தான் பெங்களூரு அணிக்கு தேவை. கோலி நிறைய பந்துகளை அடிக்க முடியாமல் தவற விட்டார். நீங்கள் உங்களை சுருக்கிக் கொண்ட பின் பேட்டிங் செய்வது எளிதல்ல. எளிதான பந்துகளை மட்டுமே நீங்கள் அடிக்க முயற்சி செய்வீர்கள். திடீரென சில பந்துகளை அடிக்க நினைத்தால் சரியாக அடிக்க முடியாது. ஆனால், கோலி அதைத் தான் செய்ய வேண்டும். அவர் பெரிய ஷாட்களை அடிக்க முயற்சி செய்ய வேண்டும்" என்றார் கவாஸ்கர்.

இந்தப் போட்டியில் பெங்களூரு அணி 20 ஓவர்களில் 206 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 171 ரன்கள் மட்டுமே எடுத்தது. பெங்களூரு அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதை அடுத்து கோலியின் நிதான இன்னிங்க்ஸ் பெரும் விமர்சனத்தில் இருந்து தப்பியது.

Story first published: Friday, April 26, 2024, 9:19 [IST]
Other articles published on Apr 26, 2024
English summary
IPL 2024 SRH vs RCB: Virat Kohli slow innings under scanner
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+