Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

3 பந்தில் 2வது விக்கெட்! டிவிஸ்ட் கொடுத்த நடுவர்..நொந்து போன கோலி, டுபிளசிஸ்.. உங்களை வச்சிக்கிட்டு!

பெங்களூரு : நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மிகவும் மோசமான ஆட்டத்தை ஆர் சி பி அணி வெளிப்படுத்தி வருவது அந்த அணி ரசிகர்களை ஏமாற்றம் அடைய செய்திருக்கிறது. நாம் நமது நண்பர்களை கிண்டல் செய்யும்போது, நீ ஜோக்கர் கிடையாது ஒட்டுமொத்த சர்க்கஸ்மே நீதான் என்று கூறுவோம்.

அதற்கு ஏற்றார் போல் தற்போது ஆர் சி பி அணி நடப்பு சீசனில் செயல்பட்டு வருகிறது. ஐபிஎல் வரலாற்றிலேயே குறைவான ரன்கள் அடித்த அணி மற்றும் அதிக ரன்களை விட்டுக் கொடுத்த அணி என இரண்டு சாதனைகளையும் ஆர் சி பி அணி படைத்திருக்கிறது. பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ஆடுகளம் ரன்குவிப்புக்கு சாதகமாக இருக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்தது.

IPL 2024 SRH vs RCB - yash thakur picks a wicket in no ball makes virat kohli angry

இந்த ஆடுகளத்தில் 240 ரன்கள் அடித்தால் கூட அதனை எளிதாக துரத்தி வெற்றி பெற முடியும். இந்த நிலையில் ஆர் சி பி அணி நினைத்திருந்தால், ஹைதராபாத் அணியை 240 முதல் 260 ரன்கள் வரை சுருட்டியிருக்க முடியும். ஆனால் அவர்கள் தங்களுக்கு கிடைத்த வாய்ப்பை வீணடித்து விட்டார்கள். ஹைதராபாத் அணி வீரர்கள் அதிரடியாக ஆடி ரன்கள் சேர்த்து வந்தனர்.

குறிப்பாக ஹென்றிச் கிளாசன் நடுவரிசையில் 31 பந்துகளை எதிர் கொண்டு 67 ரன்கள் சேர்த்த நிலையில், அவருடைய விக்கெட்டை rcb வீரர்கள் கஷ்டப்பட்டு எடுத்து விட்டனர். இந்த நிலையில் அடுத்த இரண்டாவது பந்திலே ஆர் சி பி அணியின் வீசிய பந்தில் மார்க்கரம் அடித்த பந்து ஸ்லீப்பில் நின்ற வீரரிடம் கேட்ச் ஆனது. ஆர்சிபி அணி 280 ரன்னுக்கு மேல் அடிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மூன்று பந்து இடைவெளியில் இரண்டு விக்கெட் கிடைத்து விட்டது என ஆர் சி பி ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

அப்போதுதான் நடுவர் ஒரு ட்விஸ்ட் கொடுத்தார். யாஷ் தாக்கூர் வீசியது நோபால் என்று தெரியவந்தது. இதனால் விக்கெட் எடுக்கும் வாய்ப்பு பறிபோனது. இதனை கொஞ்சம் கூட எதிர்பார்க்காத விராட் கோலி நொந்து போனார். என்ன சொல்வது என்று தெரியாமல் முகத்தை சோகமாக வைத்துக் கொண்டிருந்தார். இதை பார்த்த ரசிகர்கள் இவர்களை எல்லாம் வைத்துக் கொண்டு நீங்கள் ஐபிஎல் தொடரில் விளையாடுவது மிகவும் கொடுமை என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

Story first published: Monday, April 15, 2024, 23:07 [IST]
Other articles published on Apr 15, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+