Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

RR vs SRH - இதான் டா ஆட்டம்! 1 ரன் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் திரில் வெற்றி.. கடைசி பந்தில் வெற்றி

ஐதராபாத் : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 50ஆவது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் அணிகள் மோதிய ஆட்டம் ரசிகர்களை சீட்டின் நுனிக்கு கொண்டு சென்று பரபரப்பாக முடிந்தது.

நடப்பு ஐபிஎல் தொடரிலே சிறந்த ஆட்டம் என்றால், இதுதான் என்று பாராட்டும் அளவுக்கு இன்றைய ஆட்டம் அமைந்தது. ஐதராபாத்தில் நடைபெற்ற 50-வது லீக ஆட்டத்தில் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, கடந்த இரண்டு போட்டிகளில் தோல்வியை சந்தித்த சன்ரைசர்ஸ் அணியை எதிர்கொண்டது.

IPL 2024 SRH vs RR - Sunrisers beat Rajasthan by 1 run in nail biting finish

இதனை அடுத்து டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரராக களமிறங்கிய அபிஷேக் ஷர்மா 12 ரன்களிலும் அன்மோல் பிரீத் சிங் ஐந்து ரன்களிலும் ஆட்டம் இழக்க மூன்றாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த டிராவிஸ் ஹெட் மற்றும் நிதீஷ்குமார் ரெட்டி ஆகியோர் அபாரமாக விளையாடி ரன்களை சேர்த்தனர்.

இந்த ஜோடி மூன்றாவது விக்கெட்டுக்கு 96 ரன்கள் சேர்த்தது. ட்ராவிஸ் ஹெட் 44 பந்துகளில் 58 ரன்கள் விளாச நிதிஷ் குமார் ரெட்டி 42 பந்துகளை எதிர் கொண்டு 76 ரன்கள் விளாசினார். இதில் எட்டு இமாலய சிக்சர்களும், மூன்று பவுண்டரிகளும் அடங்கும். இறுதியில் ஹென்றிச் கிளாசன், வழக்கம் போல் தன்னுடைய அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 19 பந்துகளை எதிர்கொண்ட அவர் 42 ரன்கள் குவித்தார்.

இதில் மூன்று சிக்ஸர்களும் மூன்று பவுண்டரிகளும் அடங்கும்.இதன் மூலம் 20 ஓவர் முடிவில் மூன்று விக்கெட் இழப்பிற்கு சன்ரைசர்ஸ் அணி 201 ரன்கள் எடுத்தது. 202 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணியில் கேப்டன் சஞ்சு சாம்சன் வெளியேறினர். இதை அடுத்து மூன்றாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஜெய்ஸ்வால் மற்றும் ரியான் பராக் ஆகியோர் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தனர்.

இந்த ஜோடி மூன்றாவது விக்கெட்டுக்கு 134 ரன்கள் சேர்த்தது. அதிரடியாக ஆடிய ஜெய்ஸ்வால் 40 பந்துகளில் 67 ரன்கள் எடுக்க ரியல் பராக் 49 பந்துகளில் 77 ரன்கள் சேர்த்தார். இதில் நான்கு சிக்ஸர்களும், எட்டு பவுண்டரிகளும் அடங்கும். எனினும் இருவரும் முக்கியமான கட்டத்தில் ஆட்டம் இழந்ததால் போட்டியில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சிம்ரன் ஹெட்மாயர் 9 பந்துகளில் 13 ரன்கள் சேர்த்தார்.

ரோமன் போவெல், துருவ் ஜோரில் ஆகியோர் ஜோடி சேர்ந்து ராஜஸ்தான் அணியை மீட்க போராடினர். இரண்டு ஓவருக்கு 20 ரன்கள் அடிக்க வேண்டிய சூழலில் 19வது ஓவரின் முதல் பந்திலே ஜூரல் ஆட்டம் இழந்தார். இதனை அடுத்து ரோமன் போவெல், அஸ்வின் ஜோடி சேர்ந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றிக்காக போராடினார்கள். 19வது ஓவரில் கடைசி பந்தில் போவெல் சிக்ஸர் அடித்தார். இதனால் கடைசி ஓவரில் 13 ரன்கள் வெற்றிக்கு தேவைப்பட்டது.

இதில் முதல் பந்தில் சிங்கிள்சும், இரண்டாவது பந்தில் டபுள்சும், மூன்றாவது பந்தில் பௌண்டரியும் ராஜஸ்தான் அடித்தது. இதனை அடுத்து மூன்று பந்துகளில் 6 ரன்கள் தேவைப்பட்டபோது. நான்காவது மற்றும் ஐந்தாவது பந்தில் ரோமன் போவெல் டபுள்ஸ் எடுத்தார். இதனை அடுத்து கடைசி பந்தில் வெற்றிக்கு இரண்டு ரன்கள் தேவைப்பட்டது. ஒரு ரன் எடுத்தால் சூப்பர் ஓவர் முறை கடைபிடிக்கப்படும். ஆனால் கடைசி பந்தில் புவனேஸ்வர் குமார் வீசிய பந்து ரோமன் பொவெல் எல்பிடபிள்யூ ஆனார். இதனால் 1 ரன் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் அணி வெற்றி பெற்றது .இந்த கடைசி பந்தையும் அவுட்டா இல்லையா என டிஆர்எஸ் முறையில் பார்க்கப்பட்டது. அதில் இது அவுட் என நிரூபிக்கப்பட்டது. இதனால் போட்டி முடிவும் கடைசி நிமிடம் வரை ஆட்டம் பரபரப்பாக அமைந்தது.

Story first published: Thursday, May 2, 2024, 23:45 [IST]
Other articles published on May 2, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+