மும்பை : ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு சீசன் வரும் மார்ச் மாதம் இறுதியில் தொடங்க உள்ளது. இதற்கான அனைத்து பணிகளும் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பொறுத்தவரை தோனி ஏற்கனவே பயிற்சி தொடங்கிவிட்டார். வரும் மார்ச் முதல் வாரத்தில் சென்னையில் முகாம் நடத்தவும் அந்த அணி திட்டமிட்டுள்ளது.
இந்த நிலையில் ஐபிஎல் தொடரிலே சிறந்த தொடக்க ஜோடி எது என்பது குறித்து கவாஸ்கரிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் என்ன பதில் அளித்து இருக்கிறார் என்பதை தற்போது பார்க்கலாம். என்னை பொருத்தவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பலமே தொடக்க வீரர்களாக இருக்கிறார்கள்.

ஏனென்றால் டாப் வரிசையில் பேட்ஸ்மேன்கள் அதிரடியாக ஆடி அந்த அணிக்கு நல்ல தொடக்கத்தை கொடுத்திருக்கிறார்கள். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் முதல் பந்தில் இருந்தே அதிரடியாக விளையாடக்கூடிய வீரர்கள் இருக்கிறார்கள். மேலும் அவர்களிடம் முறையான ஃபினிஷர்களும் இருக்கிறார்கள்.
இதேபோன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடது கை, வலது கை பேட்ஸ்மேன்கள் காம்பினேஷன் தொடக்க ஜோடியாக இருக்கிறது. என்னைக் கேட்டால் ருதுராஜ் தான் ஐபிஎல் தொடரிலே சிறந்த தொடக்க ஜோடி என்று நான் கூறுவேன். ஏனென்றால் கடந்த ஆண்டு அவர்கள் சிறப்பாக விளையாடி நல்ல தொடக்கத்தை கொடுத்திருக்கிறார்கள். இதன் மூலம் பின்னால் வரும் வீரர்களின் அழுத்தம் பெரிய அளவில் குறைகிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எவ்வாறு ஐபிஎல் மினி ஏலத்தில் செயல்பட்டது என்பது குறித்து பாருங்கள். தங்கள் அணியை எவ்வாறு பலப்படுத்த முடியுமோ அந்தப் பணியை சிஎஸ்கே செய்து இருக்கிறது. கடந்த ஆண்டு அவர்களிடம் பந்துவீச்சில் சில குறைகள் இருந்தது. தற்போது பேட்டிங்கில் ராயுடுவும் இல்லை. இதனை மனதில் வைத்துக் கொண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மாற்று வீரர்களை வாங்கி இருக்கிறார்கள்.
சென்னை அணியில் இளமையும் அனுபவம் கலந்த வீரர்கள் இருக்கிறார்கள். என்னைக் கேட்டால் பிளே ஆப் சுற்றில் சி எஸ் கே கண்டிப்பாக தகுதி பெறும். தொடரை வெல்வார்களா என்று கேட்டால் எனக்கு அது சொல்லத் தெரியவில்லை. இதுவரை 16 தொடர்களில் 12 முறை அவர்கள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று இருக்கிறார்கள். இம்முறை 13-வது முறையாக சிஎஸ்கே அணி பிளே ஆப்புக்கு தகுதி பெறும் என்று கவாஸ்கர் கூறியுள்ளார்.