Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

2024 ஐபிஎல் தொடரில் இதுவரை எந்த அணியாலும் செய்ய முடியாததை செய்து காட்டிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

ஹைதராபாத் : 2024 ஐபிஎல் தொடரில் இதுவரை எந்த அணியாலும் பெற முடியாத வெற்றி ஒன்றை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பெற்று இருக்கிறது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி மோதியது. அந்த போட்டியில் சன்ரைசர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. 20 ஓவர்களில் மூன்று விக்கெட் இழப்பிற்கு 201 ரன்கள் எடுத்தது.

IPL 2024 Sunrisers Hyderabad beat Rajasthan Royals for the first time while chasing

அடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ் சேஸிங் செய்த போது 20 ஓவர்களில் 200 ரன்கள் மட்டுமே எடுத்து ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதை எடுத்து 2024 ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை முதன்முறையாக சேஸிங்கில் வீழ்த்தி இருக்கிறது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி. இதுவரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் 8 முறை சேசஸிங் செய்துள்ளது. அந்த எட்டு போட்டிகளில் ஏழு முறை வெற்றி பெற்றுள்ளது.

இந்த நிலையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் முதல்முறையாக சேஸிங் செய்து தோல்வி அடைந்துள்ளது. அதிலும் கடைசி ஓவரில் கடைசி பந்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தோல்வி அடைந்திருக்கிறது. இந்த போட்டியில் கடைசி ஓவரில் 13 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஆடியது. அப்போது ஆடுகளத்தில் ரோமன் போவல் இருந்தார். அவர் அதிரடி ஆட்டக்காரர் என்பதால் ராஜஸ்தான் அணி நம்பிக்கையுடன் இருந்தது.

கடைசி ஓவரின் முதல் ஐந்து பந்துகளில் 11 ரன்கள் எடுக்கப்பட்டது. கடைசி பந்தில் இரண்டு ரன்கள் எடுத்தால் வெற்றி என்று நிலையில் புவனேஸ்வர் குமார் அபாரமாக பந்து வீசி ரோமன் போவலை எல்பிடபுள்யூ செய்தார். அதன் மூலம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

2024 ஐபிஎல் தொடரில் நம்பர் ஒன் அணியாக வலம் வரும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதன்முறையாக சேஸிங் செய்து தோல்வியடைந்து இருக்கிறது. எனினும், அந்த அணி இன்னும் ஒரு வெற்றி பெற்றால் கூட பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ராஜஸ்தான் அணி 10 போட்டிகளில் ஆடி 8 வெற்றிகளை பெற்று இருக்கிறது.

Story first published: Friday, May 3, 2024, 11:18 [IST]
Other articles published on May 3, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+