மும்பை : குஜராத் மாநிலம் சூரத்தில் 28 வயதான மாடல் அழகி தான்யா சிங் என்ற பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் கிரிக்கெட் வீரருக்கு தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகம் இருந்துள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இடம் பெற்று இருப்பவர் அபிஷேக் ஷர்மா.
23 வயதான இவர் 2018 அண்டர் 19 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடி சாம்பியன் பட்டத்தை வென்று இருக்கிறார். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் 2018 ஆம் ஆண்டிலிருந்து ஐபிஎல் தொடரில் விளையாடி வருகிறார்.

இந்த நிலையில் அபிஷேக் ஷர்மாவும் தற்போது உயிரிழந்த தன்யா சிங்குடன் நட்புடன் இருந்ததாக தெரிகிறது. ஒருவரை ஒருவர் காதலித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் இருவரும் பல சமயங்களில் ஒன்றாக இருந்த புகைப்படத்தையும் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். மேலும் அபிஷேக் ஷர்மாவும் தன்யா சிங்கும் டேட்டிங் சென்று இருக்கிறார்கள்.
இந்த நிலையில் தன்யாசிங் திடீரென்று தனது வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். இந்த நிலையில் அவருடைய செல்ஃபோன் மற்றும் வாட்ஸ்அப் மெசேஜ்களை ஆராய்ந்தபோது அதில் அபிஷேக் ஷர்மா உடன் தன்யா சிங் தொடர்பில் இருந்தது தெரியவந்துள்ளது. இருவரும் வாட்ஸ் அப்பில் பலமுறை உரையாடி இருந்திருக்கிறார்கள்.அவர்களுடைய whatsapp செய்திகளை பார்த்த பிறகு தான் அபிஷேக் ஷர்மா தன்யாவுடன் தொடர்பில் இருப்பது தெரிய வந்திருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் அபிஷேக் ஷர்மா தன்யா சிங்குடன் சுற்றித்திரிந்த நிலையில் திடீரென்று அவருடைய மெசேஜ்களை படிக்காமலும் அதற்கு பதில் அளிக்காமல் இருந்திருக்கிறார். இதனால் மனமுடைந்து தன்யாசிங் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரிகிறது. இதுகுறித்து அபிஷேக் ஷர்மாவிடம் இதுவரை போலீசார் எந்த விசாரணையும் நடத்தவில்லை.
ஆனால் தன்யாசிங் தற்கொலைக்கு அபிஷேக் சர்மாவும் ஒரு காரணமாக இருக்கலாம் என அவரிடம் விசாரணைக்கு வருமாறு நோட்டீஸ் அனுப்ப போலீசார் முடிவெடுத்து இருக்கிறார்கள். 23 வயதான அபிஷேக் ஷர்மா கிரிக்கெட்டில் பெரிய ஆளாக வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. தற்போது இந்த வழக்கில் சிக்கி இருப்பது ரசிகர்களை வேதனை அடைய செய்து இருக்கிறது.