Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வாயை மூடுங்க டுபிளசிஸ்! ரோகித் சர்மாவை பார்த்து திருந்துங்க.. ரெய்னா கடும் தாக்கு

மும்பை : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ஆர் சி பி அணி தங்களுடைய ஏழாவது தோல்வியை தழுவி இருக்கிறது. தற்போது புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கும் ஆர்சிபி அணி பிளே ஆப் சுற்றுக்கு செல்வது மிகவும் கடினமாகும்.

இந்த நிலையில் rcb அணி இன்றைய ஆட்டத்தில் சிறப்பாக பந்து வீசினாலும் இளம் வீரர் மாயங் தாகர் 20 ஓவர் விட்டுக் கொடுத்தது ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தியது.

IPL 2024 - Suresh raina asks duplessis to support Young Players in front of media

இந்த நிலையில் இது குறித்து பேசிய ஆர் சி பி அணி கேப்டன் டுபிளசிஸ், ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருந்ததாகவும், நாங்கள் சிறப்பாக பந்து வீசி அவர்களை கட்டுப்படுத்தினோம். ஆனால் டாகர் வீசிய ஒரு ஓவர் 20 ரன்களுக்கு மேல் சென்றது. இதன் மூலம் எங்களுக்கு நெருக்கடி ஏற்பட்டு நாங்கள் தோல்வியை தழுவ காரணமாக அமைந்து விட்டதாக டுபிளசிஸ் கூறியிருந்தார்.

இந்த நிலையில் டுபிளசிஸ்சின் இந்த கருத்துக்கு சுரேஷ் ரெய்னா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், ஒரு இளம் வீரர் குறித்து செய்தியாளர்கள் முன்பு இவ்வாறு பேசுவது சரி கிடையாது. இப்படி பேசினால் அந்த இளம் வீரரின் உத்வேகம் என்னவாகும்? கேப்டனான டுபிளசிஸ்சே இந்த தொடரில் சரியாக ரன் குவிக்காமல் இருக்கிறார்.

அப்படி இருக்கும்போது அவர் இளம் வீரர் ஒருவரை குறை சொல்லலாமா? நான் டுபிளசிஸ் உடன் நிறைய ஆண்டுகள் விளையாடி இருக்கிறேன். அவர் என்னுடைய நெருங்கிய நண்பர்தான். இதனால் நான் கூறுகின்றேன், இளம் வீரர்களுக்கு அவர் ஆதரவு தெரிவிக்க வேண்டும். ரோகித் சர்மாவை பார்த்து கற்றுக் கொள்ளுங்கள். ரோகித் சர்மா என்றாவது இது போல் ஒரு இளம் வீரரை குறை கூறி பார்த்திருக்கிறீர்களா.

இளம் வீரர்களை தற்காத்து அவர்களுக்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என்று சுரேஷ் ரெய்னா கூறினார். மேலும் தொடர்ந்து பேசிய அவர், காஷ்மீரில் கிரிக்கெட் அகாடமி ஒன்றை திறக்க முயற்சி செய்ய இருப்பதாக கூறியுள்ளார். அங்கு உள்ள இளைஞர்கள் ஒரு கையில் பேட், பாலும் இன்னொரு கையில் துப்பாக்கியுடனும் இருக்கிறார்கள். அவர்கள் பேட் பாலை தான் தொட வேண்டும் என்று தான் நினைப்பதாக சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.

Story first published: Monday, April 22, 2024, 6:26 [IST]
Other articles published on Apr 22, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+