மும்பை : ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் அதிக முறை பிளே ஆப், அதிக முறை இறுதிப் போட்டிக்கு சென்ற அணி என்றால் அது சிஎஸ்கே தான். ஐந்து முறை ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வென்றிருக்கிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இவ்வளவு மகத்தான அணியாக விளங்கி இருப்பதற்கு முக்கிய காரணம் சுரேஷ் ரெய்னா தான்.
தோனிக்கு பிறகு ரெய்னா தான் பல போட்டிகளில் சிஎஸ்கே அணிக்கு வெற்றியை தேடி கொடுத்து இருக்கிறார். பேட்டிங், பந்துவீச்சு பில்டிங் என மூன்றுமே அபாரமாக செயல்பட்டு ஒவ்வொரு சிஎஸ்கே ரசிகர்களின் மனதிலும் ரெய்னா இருக்கிறார்.

இந்த நிலையில் 2021ஆம் ஆண்டுக்கு பிறகு சிஎஸ்கே அணியில் இருந்து ரெய்னா ஓரங் கட்டப்பட்டார்.அதன் பிறகு எந்த ஏலத்திலும் ரெய்னாவை யாருமே எடுக்கவில்லை. இதற்கான காரணம் என்ன என்பது குறித்தும் தெரியவில்லை. இந்த நிலையில் சிஎஸ்கே அணியின் ஆல்ரவுண்டராக இருந்த பிராவோ வேறு எந்த அணிக்கும் செல்லாமல் சிஎஸ்கே அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக தற்போது இணைந்திருக்கிறார்.
இதேபோல் ரெய்னாவும் சிஎஸ்கே அணியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு தற்போது அவர் பயிற்சியாளராக இல்லை மென்டராக சிஎஸ்கே அணியில் இருப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ரெய்னாவை சிஎஸ்கே நிர்வாகம் அழைக்கவே இல்லை. இந்த நிலையில் தற்போது ரெய்னா, லக்னோ அணியின் மென்டராக பணிபுரிய இருக்கிறார்.
ஏற்கனவே இந்த பணியை கம்பீர் செய்து வந்த நிலையில் தற்போது அவர் கொல்கத்தா அணிக்கு சென்று இருக்கிறார். லக்னோ என்பது ரெய்னா பிறந்து வளர்ந்த ஊர். இதனால் தன்னுடைய சொந்த ஊருக்கு அவர் மென்டராக நியமிக்கப்பட்டிருக்கிறார். இதுதான் தற்போது சிஎஸ்கே ரசிகர்களை கோபம் அடைய செய்திருக்கிறது. பிராவோ வை சிஎஸ்கே அணி பயிற்சியாளராக நியமித்த நிலையில் ரெய்னாவை மட்டும் ஏன் ஓரங்கட்டுகிறது.அவர் அப்படி என்ன தவறு செய்தார் என்று கேள்வி கேட்டு வருகின்றனர்.
சிஎஸ்கே அணி பல வெற்றிகளை குவித்து இருக்கிறது என்றால் அதற்கு தோனியை விட ரெய்னா மிகவும் முக்கிய பங்கு ஆற்றி இருப்பதாகவும் ஆனால் அவரை விடுவித்து இருப்பது நியாயமே அல்ல என்றும் கூறி வருகின்றனர். ஐந்து முறை கோப்பையை வாங்கித் தந்த ரோகித் சர்மாவை மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் பதவியில் இருந்து நீக்கியதற்கும் ரெய்னாவை சிஎஸ்கே அவமதித்ததற்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்று ரசிகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.