Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சிஎஸ்கே போனால் என்ன, ஐபிஎல் கோப்பையை வெல்லப்போவது தமிழர்கள் தான்.. இதை பாருங்க!

சென்னை : ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு பிளே ஆப் சுற்றுக்கு செல்ல முடியாமல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெளியேறியது. பெங்களூரில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் குறைந்தபட்சம் 201 ரன்கள் கூட எடுக்க முடியாமல் ரன் ரேட் அடிப்படையில் பிளே ஆப் செல்லும் வாய்ப்பை இழந்தது.

இந்த சூழலில் ஆர் சி பி அணி ரசிகர்கள் தாங்கள் பிளே ஆப் சென்றது. ஏதோ ஐபிஎல் கோப்பையை வென்றது போல் விமரிசையாக கொண்டாடியதுடன் சிஎஸ்கே ரசிகர்களுடன் அத்துமீறி நடந்து கொண்டதாக புகார் எழுந்தது.

IPL 2024 - Tamil nadu player will win this season championship as 4 Finalist have atleast one TN Players

இதனால் சிஎஸ்கே அணி இம்முறை பிளே ஆப் சுற்றுக்கு செல்ல முடியவில்லை என்று ரசிகர்கள் வருத்தத்தில் இருந்தனர். இந்த நிலையில் சிஎஸ்கே பிளே ஆப் சுற்றுக்கு செல்ல முடியவில்லை என்றாலும், இம்முறை தமிழர் ஒருவர் தான் ஐபிஎல் கோப்பையை வெல்லப் போகிறார் என்ற மகிழ்ச்சியான செய்தி அமைந்திருக்கிறது. அது என்னவென்று தற்போது பார்க்கலாம்.

தற்போது ஐபிஎல் பிளே ஆப் சுற்றுக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ், ஆர் சி பி ஆகிய நான்கு அணிகள் தகுதி பெற்று இருக்கிறது. இந்த நான்கு அணியிலுமே தமிழக வீரர்கள் இடம் பிடித்திருக்கிறார்கள். இந்த நான்கு அணிகளில் எப்படியும் ஒரு அணி தான் சாம்பியன் பட்டத்தை வெல்லும்.

அந்த 4 அணியிலும் ஒரு தமிழர் இருப்பார்.அது யார் என்று தற்போது பார்க்கலாம். கே.கே.ஆர் அணியில் தமிழக சுழற் பந்துவீச்சாளர் வருண் சக்கரவர்த்தி இடம் பெற்றிருக்கிறார். இதேபோன்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் தமிழக வீரர் நடராஜன் இருக்கிறார். சன்ரைசர்ஸ் வெற்றிக்கு நடராஜன் பங்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இதேபோன்று ராஜஸ்தான் அணியில் தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின் இருக்கிறார். அஸ்வினின் அனுபவம் பிளே ஆப் சுற்றில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக ராஜஸ்தான் அணிக்கு கருதப்படுகிறது. ஆர் சி பி அணியில் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் இருக்கிறார். ஆர்சிபி அணி பினிஷராக தினேஷ் கார்த்திக் தான் உள்ளார். இதனால் இந்த நான்கு அணிகளில் ஏதேனும் ஒரு அணி சாம்பியன் பட்டத்தை வென்றால் கூட, அதில் தமிழர் இடம் பெற்று இருப்பார். இது தமிழக கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஒரு ஆறுதல் செய்தியாக அமைந்திருக்கிறது.

Story first published: Tuesday, May 21, 2024, 12:17 [IST]
Other articles published on May 21, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+