டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட், பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுடேலா-வை காதலித்து வந்தார். பின்னர் இருவரும் பிரிந்து விட்டதாக கூறப்பட்டது. சமூக வலைதளங்களில் ஒருவரை ஒருவர் தாக்கி பதிவுகளை வெளியிட்டனர்.
அதன் பின் ரிஷப் அண்ட் கிரிக்கெட் போட்டிகளில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார். இடையே சாலை விபத்தில் சிக்கி ஒன்றரை ஆண்டுகள் ஓய்வில் இருந்தார். அதில் இருந்து மீண்டு தற்போது 2024 ஐபிஎல் தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டனாக விளையாடி வருகிறார். அடுத்து 2024 டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியிலும் இடம் பெற்று இருக்கிறார்.

இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுடேலாவிடம் ரசிகர் எழுப்பிய கேள்வி ஒன்று கேட்கப்பட்டது. அந்த ரசிகர், "நீங்கள் ரிஷப் பண்ட்டை திருமணம் செய்து கொள்வீர்களா? அவரை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என நான் விரும்புகிறேன். அவர் உங்களை நன்றாக பார்த்துக் கொள்வார்" எனக் கூறி இருந்தார். அந்தக் கேள்விக்கு பதில் அளித்த ஊர்வசி ரவுடேலா இரண்டே வார்த்தையில், "நோ கமெண்ட்ஸ்" எனக் கூறி விட்டார். அதாவது தான் பதில் அளிக்க விரும்பவில்லை எனக் கூறி விட்டார். அவர் முற்றிலுமாக ரிஷப் பண்ட் கேள்வியை தவிர்த்து விட்டார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது ரிஷப் பண்ட் ரசிகர்கள் பலரும் ஊர்வசி ரவுடேலா-வை விமர்சித்து கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். தற்போது ரிஷப் பண்ட் ஐபிஎல் தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். அந்த அணி 11 போட்டிகளில் 5 வெற்றிகளை மட்டுமே பெற்று இருக்கிறது. அடுத்து வரும் போட்டிகளில் வென்றால் பிளே ஆப் செல்ல சிறிய வாய்ப்பு உள்ளது. கேப்டன் ரிஷப் பண்ட் டெல்லி கேபிடல்ஸ் அணியை பிளே-ஆஃப் அழைத்துச் செல்வாரா? என அவரது ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.