Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

எவ்வளவு பெரிய பேட்ஸ்மேன் தெரியுமா டா? ஆர்சிபியுடன் இருந்ததால் கோலி படைத்த மோசமான சாதனை

மும்பை : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்றால் அது விராட் கோலி தான். உலக கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளை படைத்திருக்கும் விராட் கோலி தற்போது ஆர்சிபி அணியில் இடம் பெற்று இருப்பதால் ஒரு மோசமான சாதனையில் சிக்கியிருக்கிறார்.

ஆர் சி பி அணி இதுவரை ஒருமுறை கூட ஐபிஎல் கோப்பையை வென்றதில்லை. விராட் கோலி ஐபிஎல் தொடரின் முதல் சீசனில் இருந்து தொடர்ந்து 17வது சீசன் வரை அந்த அணிக்காக விளையாடி வருகிறார்.

IPL 2024 - Virat kohli created unwanted record with RCB by Part of most loss


உடல்,பொருள், ஆவி என மூன்றையும் ஆர்சிபி அணிக்காக கொடுத்திருக்கும் விராட் கோலிக்கு அந்த அணியால் ஒரு நல்லது கூட இதுவரை கிடைக்கவில்லை. விராட் கோலி மட்டும் வேறு ஏதேனும் அணியில் இருந்திருந்தால் நிச்சயம் அவர்கள் பலமுறை சாம்பியன் பட்டத்தை வாங்கி இருப்பார்கள். ஆனால் அவருடைய துரதிஷ்டம் ஆர்சிபி போல் ஒரு மொக்க அணியிடம் சிக்கி சீரழிந்து வருகிறார்.

இந்த நிலையில் இன்றைய ஆட்டத்தில் லக்னோ அணிக்கு எதிராக ஆர்சிபி தோற்று இருக்கிறது. இதன் மூலம் விராட் கோலி ஒரு மோசமான சாதனையில் சிக்கிருக்கிறார். அதன்படி ஐபிஎல் வரலாற்றில் அதிக போட்டிகளில் தோல்வியை தழுவிய வீரர் என்ற இக்கட்டான சாதனை விராட் கோலிக்கு கிடைத்திருக்கிறது. ஐபிஎல் வரலாற்றில் ஒரே அணியில் விளையாடும் வீரர்களின் ஒருவரான கோலி இதுவரை 120 தோல்விகளில் பங்கு பெற்றிருக்கிறார்.

இவருக்கு அடுத்தபடியாக பல ஐபிஎல் அணிகளில் மாறி தற்போது ஆர் சி பி அணிக்காக விளையாடி வரும் தினேஷ் கார்த்திக் 118 போட்டிகளில் தோல்வியில் சந்தித்திருக்கிறார். இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா இருக்கிறார். இவர் ஐபிஎல் தொடரில் 112 போட்டிகள் தோல்வியை சந்தித்திருக்கிறார்.

நான்காவது இடத்தில் ஷிகர் தவான் 107 தோல்வியுடன் உள்ள நிலையில், ராபின் உத்தப்பா 106 தோல்வியுடன் ஐந்தாவது இடத்தில் இருக்கிறார். சிஎஸ்கே அணியின் ஜாம்பவான் மகேந்திர சிங் தோனி 104 போட்டிகளில் ஐபிஎல் தொடரில் தோல்வியில் பங்கேற்று இருக்கிறார். இதைப் போன்று ஐபிஎல் தொடரில் அதிக முறை ஆல் அவுட் ஆன அணி என்ற பட்டியலில் ஆர்சிபி அணி இரண்டாவது இடத்தை பிடித்திருக்கிறது.

டெல்லி அணி 25 முறை ஆல் அவுட் ஆகி முதலிடத்தில் உள்ள நிலையில், ஆர் சி பி அணி 24 முறை ஆல் அவுட் ஆகி இரண்டாவது இடத்தில் உள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் 23 முறை ஆல் அவுட் ஆகி மூன்றாவது இடத்திலும், பஞ்சாப் அணி 22 முறை ஆல் அவுட் ஆகி நான்காவது இடத்திலும் உள்ளது.

Story first published: Wednesday, April 3, 2024, 7:14 [IST]
Other articles published on Apr 3, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+