For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

விராட் கோலியின் வெறித்தன இன்னிங்ஸ்.. ஸ்ட்ரைக் ரேட் சர்ச்சைக்கு பதிலடி.. தொடக்க வீரர் இடம் உறுதி

மும்பை : ஐபிஎல் கிரிக்கெட் தொடர் பஞ்சாப் அணிக்கு எதிரான வாழ்வா? சாவா? ஆட்டத்தில் இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் விராட் கோலி தன் வாழ்நாளில் சிறந்த இன்னிங்ஸ் ஒன்றை விளையாடியிருக்கிறார். விராட் கோலியின் ஸ்டிரைக் ரேட் மிகவும் குறைவாக இருக்கிறது என்று அவருக்கு எதிராக பல விமர்சனங்கள் இருந்தது.

மேலும் விராட் கோலி சுயநலமாக விளையாடுகிறார் என்றும் அவர் அணிக்காக விளையாடுவதில்லை என்றும் ரசிகர்கள் விமர்சனம் செய்தனர் மேலும் டி20 உலக கோப்பையில் இந்திய அணியில் விராட் கோலி தேர்வு செய்யப்பட்டதற்கும் சிலர் விமர்சனம் செய்தனர்.

IPL 2024 - Virat kohli proved his caliber as opening batsman with brilliant innings

விராட் கோலியை தொடக்க வீரராக பயன்படுத்தினால், நன்றாக இருக்கும். ஆனால் அவருடைய ஸ்ட்ரைக் ரேட் அதற்கு ஒத்து வராது என்றும் கூறி வந்தனர். தன் மீது எப்போதெல்லாம் விமர்சனம் எடுக்கிறதோ, அதற்கு எல்லாம் தன்னுடைய பேட்டிங் மூலம் பதிலடி கொடுப்பதையே விராட் கோலி கொள்கையாகவே வைத்திருக்கிறார்.

இந்த நிலையில் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் விராட் கோலி தன் வாழ்நாளில் சிறந்த இன்னிங்ஸ் ஒன்றை ஆடினார். ஒவ்வொரு ஷாட்டும் ரசிகர்களை மிரள வைக்கும் அளவுக்கு இருந்தது. 2010 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் தர்மசாலாவில் இது பஞ்சாப் அணிக்கு எதிராக தோனி எவ்வாறு ஆடினாரோ அதே 47 பந்துகளில் விளையாடினால் எவ்வாறு இருக்கும் அதை தான் விராட் கோலி என்று செய்து காட்டியிருக்கிறார்.

முதலில் 32 பந்துகளில் அரை சதம் அடித்த விராட் கோலி அதன் பிறகு ருத்ர தாண்டவம் ஆடினார். மழை வேறு குறிக்கிட்டதால் ஆட்டம் பாதியில் நின்றால் என்ன செய்வது என்று விராட் கோலி தன்னுடைய ஸ்டைலிஷ் ஆன ஷார்ட்டுகளை ஆடி ரன்களை சேர்த்தார். விராட் கோலியை கட்டுப்படுத்த முடியாமல் பஞ்சாப் வீரர்கள் தடுமாறினர். ஆட்டத்தின் 17.4 வது ஓவரில் விராட் கோலி 47 பந்துகளில் 92 ரன்கள் குவித்தார். இதில் ஏழு பவுண்டரிகளும் 6 இமாலய சிக்சர்களும் அடங்கும்.

விராட் கோலி மட்டும் கடைசி வரை நின்று இருந்தால் நிச்சயம் 150 ரன்கள் மேல் தனியாகவே அடித்திருப்பார். விராட் கோலி ஸ்ட்ரைக் ரேட் தொடர்பாக பலரும் விமர்சித்த நிலையில், இன்றைய ஆட்டத்தில் அவர் 195 என்ற அளவில் ஸ்ட்ரைக் ரைட்டை வைத்திருக்கிறார். இதனால் விராட் கோலி இந்திய அணியின் தொடக்க வீரராக டி20 உலக கோப்பையில் விளையாடுவதற்கான அனைத்து எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்து விட்டதாக கருத்து தெரிவித்துள்ள ரசிகர்கள் விராட் கோலி டி20 உலக கோப்பையில் தொடக்க வீரராக தன்னுடைய இடத்தை உறுதி செய்து விட்டார் என்று பாராட்டுகின்றனர்.

Story first published: Thursday, May 9, 2024, 22:44 [IST]
Other articles published on May 9, 2024
English summary
IPL 2024 - Virat kohli proved his caliber as opening batsman with brilliant innings விராட் கோலியின் வெறித்தன இன்னிங்ஸ்.. ஸ்ட்ரைக் ரெட் சர்ச்சைக்கு பதிலடி.. தொடக்க வீரர் இடம் உறுதி
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+