Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டுபிளசிஸ் எடுத்த முடிவு.. விராட் கோலியிடம் கெஞ்சிய ஆர்சிபி.. மீண்டும் கேப்டனாக திரும்புகிறாரா கிங்?

சென்னை : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் தற்போது ஆர்சிபி அணி புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கிறது. இதுவரை விளையாட 8 போட்டிகளில் அவர்கள் 7 போட்டிகளில் தோல்வியை தழுவி விட்டார்கள் ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று இரண்டு புள்ளிகள் உடன் தற்போது பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கிறார்கள்.


ஆர் சி பி இனி விளையாட போகும் 6 போட்டிகளில் வென்றால் கூட அவர்கள் பிளே ஆப் சுற்றுக்கு செல்ல மற்றவர்களின் தயவு தேவைப்படும். இதனால் ஆர் சி பி தொடரிலிருந்து வெளியேறுவது உறுதியாகிவிட்டது. இந்த நிலையில் ஆர்சிபி அணி தொடர்ந்து பேட்டிங் பந்துவீச்சு என இரண்டு என்றுமே தடுமாறி வருகிறது.

IPL 2024 - Virat kohli rejects the offer of RCB Captaincy


இதனால் கேப்டன் பதவியில் இருந்து விலகிவிடலாம் என டுபிளசிஸ் முடிவெடுத்து இருப்பதாக ஆர்சிபி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. டுபிளசிஸ் வயது ஆகிவிட்டதால் நடப்பு சீசனிலே கேப்டன் பதவியில் இருந்து விலகி முற்றிலும் பேட்டிங்கில் கவனம் செலுத்த டுபிளசிஸ் யோசித்து வருவதாக கூறப்படுகிறது.

ஆர் சி பி அணி நிர்வாகமும் இது சரியான முடிவாக இருக்கும் என நினைக்கிறது. இந்த நிலையில் புதிய கேப்டனாக மீண்டும் விராட் கோலியை வரவேண்டும் என ஆர் சி பி நிர்வாகம் நினைக்கிறது. ஆர்சிபி அணியின் செயல்பாடு காரணமாக அந்த அணியின் மீதான எதிர்பார்ப்பு மங்கி இருக்கிறது. இதனால் வியாபார நோக்கிலும் மீண்டும் rcb அணி வெற்றி பெற வேண்டும் என்பதாலும் விராட் கோலி கேப்டன் பதவிக்கு வர வேண்டும் என ஆர் சி பி நிர்வாகம் முடிவெடுத்திருக்கிறது.

இது தொடர்பாக விராட் கோலியிடம் ஆர் சி பி நிர்வாகிகள் பேசி இருக்கிறார்கள். ஆனால் இதற்கு விராட் கோலி ஒப்புதல் வழங்கவில்லை. தான் இனி கேப்டனாக இருக்கப் போவதில்லை என்றும் தமக்கு பதில் வேறொரு இளம் வீரரை தேர்ந்தெடுத்து அவரை கேப்டனாக வளர்க்க முயற்சி எடுங்கள் என்றும் விராட் கோலி கூறியிருக்கிறார்.

மேலும் மும்பை, சிஎஸ்கே போன்ற அணிகள் இளம் வீரர்களை கேப்டனாக தேர்ந்தெடுப்பதால், ஆர் சி பி யும் இந்த முடிவை எடுப்பதுதான் சரி என்று விராட் கோலி வாய்ப்பை மறுத்து விட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இதனால் ஆர் சி பி அணியில் புதிய கேப்டன் தொடர்பான அறிவிப்புக்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Wednesday, April 24, 2024, 7:01 [IST]
Other articles published on Apr 24, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+