IPL 2024: ஐபிஎல் வரலாற்றில் வேறு எந்த வீரரும் செய்யாத பிரம்மாண்ட பேட்டிங் ரெக்கார்டை செய்த கோலி
ஹைதராபாத் : ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் துவக்க வீரராக ரன் குவித்து வரும் விராட் கோலி, ஐபிஎல் வரலாற்றில் வேறு எந்த வீரரும் செய்யாத பிரம்மாண்ட சாதனை ஒன்றை செய்து இருக்கிறார்.
2024 ஐபிஎல் தொடரில் முதல் வீரராக 400 ரன்களை கடந்து இருக்கும் விராட் கோலி, இத்துடன் மொத்தம் 10 ஐபிஎல் தொடர்களில் 400 ரன்களுக்கும் மேல் ரன் குவித்து சாதனை படைத்து இருக்கிறார்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் விராட் கோலி அரைசதம் அடித்தார். அப்போது விராட் கோலி 2024 ஐபிஎல் தொடரில் 400 ரன்களை கடந்தார். இதற்கு முன்பு ஒன்பது முறை 400 ரன்களுக்கும் அதிகமாக விராட் கோலி ஒரே தொடரில் ரன் குவித்து இருந்தார். அவருக்கு இணையாக சுரேஷ் ரெய்னா, ஷிகர் தவான், டேவிட் வார்னர் ஆகியோரும் ஒன்பது முறை ஒரே ஐபிஎல் தொடரில் 400 ரன்களுக்கும் மேல் ரன் குவித்து இருந்தனர்.
தற்போது அவர்கள் மூவரையும் முந்தி 10 முறை ஐபிஎல் தொடரில் 400 ரன்களுக்கும் மேல் குவித்தவ் வீரர் என்ற பிரம்மாண்ட சாதனையை செய்துள்ளார் விராட் கோலி. அது மட்டுமின்றி பெங்களூரு அணியின் துவக்க வீரராக 4000 ரன்கள் என்ற மைல்கல்லையும் கடந்தார் விராட் கோலி.
ஐபிஎல் சீசனில் அதிக முறை 400+ ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியல் -
விராட் கோலி - 10 முறை - 2011, 2013, 2015, 2016, 2018, 2019, 2020, 2021, 2023, 2024
சுரேஷ் ரெய்னா - 9 முறை - 2008, 2009, 2010, 2011, 2012, 2013, 2014, 2017, 2018
ஷிகர் தவான் - 9 முறை - 2011, 2012, 2016, 2017, 2018, 2019, 2020, 2021, 2022
டேவ்ட் வார்னர் - 9 முறை - 2013, 2014, 2015, 2016, 2017, 2018, 2019, 2020, 2022, 2023
ரோஹித் சர்மா - 7 முறை - 2008, 2010, 2012, 2013, 2015, 2016, 2019


Click it and Unblock the Notifications