For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

உங்க மனைவி தான்.. தினேஷ் கார்த்திக்கை பார்த்து விராட் கோலி சொன்ன பதில்.. என்ன நடந்தது?

பெங்களூரு : ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு சீசனில் ஆர்சிபி அணி முதல் பாதியில் தடுமாறி வந்தாலும் பிற்பாதியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. ஐபிஎல் தொடரை பொறுத்தவரை 14 லீக் ஆட்டங்கள் இருக்கின்றது.

இந்தத் தொடரில் முதல் பாதியில் தொடர்ந்து தோல்விகளை சந்தித்தாலும், பிற்பாதியில் தொடர் வெற்றிகளைப் பெற்றால் சாம்பியன் பட்டத்தை கூட வெல்ல முடியும். இதனால் தான் ஐபிஎல் தொடர் இன்னும் சுவாரஸ்யம் குறையாமல் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.

IPL 2024 - Virat kohli your wife comment towards Dinesh karthik made every one laugh

ஆர்சிபி அணி புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருந்த நிலையில் தற்போது அந்த அணி அடுத்தடுத்து வெற்றியை பெற்று 11 போட்டிகளில் விளையாடி நான்கு வெற்றி ஏழு தோல்வி என எட்டு புள்ளிகளுடன் தற்போது புள்ளி பட்டியலில் ஏழாவது இடத்தில் உள்ளது ஆர்சிபி அணி தொடர்ந்து வெற்றி பெற்றால் மற்ற அணிகளின் தயவு கிடைத்தால் அவர்களால் பிளே ஆப் சுற்றுக்கு கூட செல்ல முடியும்.

இந்த நிலையில் ஆர்சிபி அணி எவ்வளவு நெருக்கடி ஏற்பட்டாலும் தாங்கள் சந்தோஷமாக தான் இருக்கிறோம் என்பதை காட்டிக்கொள்ள பல வீடியோக்களை வெளியிட்டு வருகின்றது. இதில் விராட் கோலி தினேஷ் கார்த்திக் போன்றோர் பங்கேற்று பேசிய காட்சி தற்போது சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி வருகிறது.

இதில் தினேஷ் கார்த்திக் இடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. அதில் கிரிக்கெட்டை தாண்டி உங்களுக்கு பிடித்த விளையாட்டு வீரர் யார் என்று கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு அங்கிருந்த விராட் கோலி திடீரென்று உங்க மனைவி தான் என்று தினேஷ் கார்த்திக் நோக்கி பதில் அளித்தார். விராட் கோலியின் இந்த பதிலை கேட்டவுடன் ஒரு சிலர் அதிர்ச்சி அடைந்தாலும் அங்கிருந்த மற்ற வீரர்கள் கலகலவென சிரித்தார்கள்.

தினேஷ் கார்த்திக் குறித்து தெரியாத சிலர் விராட் கோலி ஏன் இப்படி ஒரு பதிலை கூறினார் என்று கருத்து தெரிவித்துள்ளனர். விராட் கோலியின் மனைவி தீபிகா பல்லிக்கல் மிகப்பெரிய ஸ்குவாஷ் வீராங்கனை ஆவார். காமன்வெல்த், ஆசிய கோப்பை என பல்வேறு தொடர்களில் பதக்கம் வென்ற தீபிகா பல்லிக்கல் இரண்டாவது முறையாக தினேஷ் கார்த்திக்கை திருமணம் செய்து கொண்டார். இதனால் தான் தினேஷ் கார்த்திக்கிற்கு அவருடைய மனைவியை தான் பிடிக்கும் என்று விராட் கோலி கூறியது குறிப்பிடத்தக்கது.

Story first published: Sunday, May 5, 2024, 16:26 [IST]
Other articles published on May 5, 2024
English summary
IPL 2024 - Virat kohli your wife comment towards Dinesh karthik made every one laugh உங்க மனைவி தான்.. தினேஷ் கார்த்திக்கை பார்த்து விராட் கோலி சொன்ன பதில்.. என்ன நடந்தது?
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+