கொல்கத்தா: ஐபிஎல் தொடருக்கான மினி ஏலத்தில் கேகேஆர் அணியின் திட்டம் என்னவாக இருக்கும் என்பது குறித்து பார்க்கலாம்.
ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் நாளை துபாயில் நடக்கவுள்ளது. இந்த ஐபிஎல் தொடரின் மினி ஏலத்தில் கொல்கத்தா அணி மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஏனென்றால் கேகேஆர் அணியின் கேப்டனாக இருந்த போது 2 கோப்பைகளை வென்று கொடுத்தவர் கவுதம் கம்பீர். அவர் மீண்டும் கேகேஆர் அணியின் ஆலோசகராக இணைந்துள்ளார்.

அதேபோல் இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் மீண்டும் கேகேஆர் அணியின் கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல் குர்பாஸ், வெங்கடேஷ் ஐயர், ரஸல், வருண் சக்கரவர்த்தி, சுயாஷ் சர்மா, சுனில் நரைன், நிதீஷ் ராணா மற்றும் ரிங்கு சிங் ஆகியோர் இணைந்து தரமான அணியாக உருவாகியுள்ளனர்.
அந்த அணியை பொறுத்தவரை இரு சர்வதேச தரம் வாய்ந்த வேகப்பந்துவீச்சாளர்கள் மட்டுமே தேவையாக உள்ளது. அதேபோல் பேக் அப் விக்கெட் கீப்பர், பேக்அப் தொடக்க வீரர், பேக்அப் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் மட்டுமே தேவையாக உள்ளது. ஆனால் கவுதம் கம்பீர் மனதில் என்ன உள்ளது என்பதை யாராலும் அறிய முடியாது.
அதேபோல் கேகேஆர் அணியின் கைகளில் ரூ.32.70 கோடி கையிருப்பதில் இருப்பதால் இரு வீரருக்கு ரூ.17 கோடி வரையிலும், மற்றொரு வீரருக்கு ரூ.7 கோடிக்கு அதிகமாகவும் செலவிட தயங்காது என்று பார்க்கபப்டுகிறது.இருப்பினும் கொல்கத்தா அணி எப்போதும் வேகப்பந்துவீச்சாளர்கள் வாங்குவதில் அதிக விருப்பம் காட்டும் என்பதால், பேட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க் மற்றும் கோட்சியே உள்ளிட்டோரில் ஒருவரை வாங்க ஆர்வம் காட்டும் என்று கணிக்கப்படுகிறது.
அதேபோல் கொல்கத்தா மைதானத்தின் ஆடுகளத்திற்கு ஏற்ப பந்துவீசும் ஹர்சல் படேலை வாங்கவும் வாய்ப்பிருப்பதாக பார்க்கப்படுகிறது.அதேபோல் விக்கெட் கீப்பராக கேஎஸ் பரத், ஆஸ்திரேலியா அணியின் ஜோஷ் இங்லிஸ் உள்ளிட்டோரை ஏலத்தில் வாங்க முயற்சிக்கும் என்று பார்க்கப்படுகிறது.