Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சிஎஸ்கே அணியிலும் விரிசலா? ஆல்ரவுண்டரை ஒதுக்கிய தோனி, ருதுராஜ்.. வாய்ப்பே தராமல் இழுத்தடிப்பு

சென்னை : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நடப்பு சாம்பியனாக களம் இறங்கியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புள்ளி பட்டியலில் நான்கு போட்டிகளில் களமிறங்கி இரண்டு வெற்றி, இரண்டு தோல்வி என நான்கு புள்ளிகளுடன் தற்போது நான்காவது இடத்தில் உள்ளது.

இன்றைய ஆட்டத்தில் சிஎஸ்கே அணி பலம் வாய்ந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் பல பரிட்சை நடத்த உள்ளது. கொல்கத்தா அணி மூன்று போட்டிகளில் விளையாடி மூன்றிலுமே வெற்றி பெற்று ஆறு புள்ளிகளுடன் தற்போது இரண்டாவது இடத்தில் உள்ளது.

IPL 2024 - Why CSK avoiding Shardul thakur in playing xi

இன்றைய ஆட்டத்தில் சிஎஸ்கே அணி வெற்றி பெற்றால் மூன்றாவது இடத்திற்கு முன்னேற வாய்ப்பு உள்ளது. இந்த ஆட்டத்தில் தோல்வியை சந்தித்தால் சிஎஸ்கே அணி ஐந்தாவது இடத்திற்கு சரிய வாய்ப்பு இருக்கிறது. இந்த நிலையில் சிஎஸ்கே அணியில் விரிசல் ஏற்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது. சிஎஸ்கே அணியில் இடம்பெற்றிருக்கும் ஆல்ரவுண்டர் சர்துல் தாக்கூரை, தோனி, ருதுராஜ் இதுவரை சேர்க்கவில்லை.

சர்துல் தற்போது நல்ல பார்மில் இருக்கிறார். நடந்து முடிந்த ரஞ்சி கோப்பையில் அவர் மும்பை அணியின் சார்பாக பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் ஜொலித்திருக்கிறார். இந்த நிலையில் சர்துல் தாக்கூர் சிஎஸ்கே அணி வாங்கியிருந்தும் அவரை பிளேயிங் லெவனனில் சேர்க்காமல் வீணடித்து வருகிறது. சர்துல் முழு உடல் தகுதியுடன் இருக்கிறார். அவரை சப்ஸ்டிட்யூட் பட்டியலில் வைத்திருக்கும் சிஎஸ்கே அணி இம்பேக்ட் வீரராக கூட களம் இறக்கவில்லை.

சிஎஸ்கே அணி பந்துவீச்சில் கடுமையாக சொதப்பி வருகிறது. இந்திய பவுலர்கள் யாரும் விக்கெட்டுகள் எடுப்பது போல் தெரியவில்லை. கடந்த ஆட்டத்தில் முகேஷ் சவுத்ரி ரன்களை வாரி வழங்கினார். இதனால் சிஎஸ்கே அணி கண்டிப்பாக சர்துல் தாக்கூரை அணியில் சேர்த்தால் மட்டுமே ஓரளவுக்கு தப்பிக்க முடியும்.

ஆனால் சர்துல் தாக்கூருக்கு சிஎஸ்கே அணி வாய்ப்பு வழங்காமல் பெஞ்சில் அமர வைத்திருப்பது அந்த அணியில் ஏதேனும் பிரச்சனை இருப்பதை காட்டுவதாக கிரிக்கெட் வல்லுநர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதே போன்று சிஎஸ்கே அணியில் ராஜவர்தன் ஹங்கேர்கர், நிசாந்த் சித்து போன்ற பல இளம் வீரர்கள் இருந்தும் அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்காமல் சிஎஸ்கே அணி வீணடித்து வருவதாகவும் ரசிகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Story first published: Monday, April 8, 2024, 15:36 [IST]
Other articles published on Apr 8, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+