Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பஞ்சாப்க்கு எதிராக தொடர்ந்து 5வது தோல்வி.. சோகத்திற்கு முடிவுரை எழுதுமா சிஎஸ்கே.. பதிலடி தர வாய்ப்பு

மும்பை : ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தற்போது புள்ளி பட்டியலில் ஐந்தாம் இடத்தில் இருக்கிறது. விளையாடிய பத்து போட்டிகளில் ஐந்து வெற்றி, ஐந்து தோல்வி என சி எஸ் கே அணி தற்போது இக்கட்டான நிலையில் இருக்கிறது.

இந்த நிலையில் ஐபிஎல் தொடரிலே பலம் வாய்ந்த அணியாக சிஎஸ்கே கருதப்படுகிறது. ஆனால் ஒருமுறை கூட கோப்பை வாங்காத பஞ்சாப் அணியிடம் சிஎஸ்கே அணி தொடர்ந்து ஐந்து முறை தோல்வியை தழுவி இருக்கிறது.

IPL 2024- Will CSK Pay backs Punjab kings again in upcoming match

அண்மையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பஞ்சாப்பை எதிர்கொண்டு சேப்பாக்கம் மைதானத்தில் தோல்வியை தழுவியது. இந்த நிலையில் இந்த தோல்விக்கு பதிலடி கொடுக்கும் விதமாக சூப்பர் கிங்ஸ் அணிக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. வரும் ஞாயிற்றுக்கிழமை தர்மசாலாவில் மாலை 3.30 மணிக்கு நடைபெறும் போட்டியில் மீண்டும் பஞ்சாப் அணியை சிஎஸ்கே எதிர்கொள்ள உள்ளது.

சென்னை அணியை வீழ்த்திய பிறகு பஞ்சாப் அணி சமூக வலைத்தளத்தில் கடும் கிண்டல்களை செய்தது. மேலும் தோனி ரன் அவுட் ஆனதையும் கிண்டல் செய்யும் விதமாக பதிவிட்ட பஞ்சாப் அணி சிஎஸ்கேவை வீழ்த்தியவுடன் சோலி முடிஞ்சது என்று பதிவிட்டு இருந்தார்கள். இது சிஎஸ்கே ரசிகர்களை கடுப்படைய செய்திருக்கிறது.

ஒரு முறை கூட கோப்பை வாங்காத பஞ்சாப் அணி இவ்வாறு வாய் பேசுவது அவர்களுடைய கையாலாதத்தனத்தை காட்டுவதாக சிஎஸ்கே ரசிகர் குற்றச்சாட்டி உள்ளனர். இந்த நிலையில் வரும் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் ரவுண்டு 2 வில் பஞ்சாப்பை சந்திக்கும் போது சிஎஸ்கே அணி அபாரமாக விளையாடி வீழ்த்த வேண்டும் என்று ரசிகர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

சிஎஸ்கே அணியில் காய்ச்சல் காரணமாக விளையாடாமல் இருந்த தேஷ் பாண்டே அணிக்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது .இதை போல் தீபக் சாகருக்கு பதில் சர்துல் தாக்கூர் பிளேயிங் லெவனில் இடம் பெறுவார் என தெரிகிறது. இந்த நிலையில் ராஜவர்த்தன் ஹங்கர்கேகர் போன்ற இளம் வீரர்களை சிஎஸ்கே அணி சேர்க்க வேண்டும் என்று ரசிகர்கள் வலியுறுத்தியுள்ளனர். மேலும் ரகானே,ஜடேஜா போன்ற வீரர்கள் தங்களுடைய பார்முக்கு திரும்பி தங்களுடைய இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் சிஎஸ்கே அணி நிச்சயம் வெற்றி பெற முடியும்.

பஞ்சாப் அணியிலும் பாரிஸ்டோ, சஷாந்ங் சிங், ஆஸ்டோஸ் சர்மா போன்ற வீரர்கள் உள்ளனர். மேலும் சிக்கர் தவான் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் போட்டியில் அணிக்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. பஞ்சாப் அணியின் சுழற் பந்துவீச்சாளர்களை சிஎஸ்கே வீரர்கள் எதிர்கொள்ள தடுமாறினார்கள். ஆனால் தர்மசாலாவில் இருக்கும் ஆடுகளம் ரன்குவிப்புக்கு சாதகமாக இருக்கும் என்பதால் சிஎஸ்கே வீரர்கள் இதனை நன்றாக பயன்படுத்திக் கொண்டு ரன்குவிப்பில் ஈடுபட வேண்டும் என்று ரசிகர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Story first published: Friday, May 3, 2024, 18:14 [IST]
Other articles published on May 3, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+